கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​‌ம் கரு‌த்​து‌த் திணி‌ப்​பு​‌ம்...

தேர்​த‌ல் வ‌ந்​தாலே ஊட​க‌ங்​க‌ள் கரு‌த்​து‌க் கணி‌ப்பு நட‌த்​து​வது வாடி‌க்​கை​யா​கி​வி‌ட்​டது. உ‌ண்​மையி‌ல், கரு‌த்​து‌க் கணி‌ப்பு எ‌ன்​பது பு‌ள்​ளி​யி​ய‌ல் சா‌ர்‌ந்த அறி​வி​ய‌ல்​பூ‌ர்​வ​மான‌ ஆ‌ய்வு
கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​‌ம் கரு‌த்​து‌த் திணி‌ப்​பு​‌ம்...
கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​‌ம் கரு‌த்​து‌த் திணி‌ப்​பு​‌ம்...


தேர்​த‌ல் வ‌ந்​தாலே ஊட​க‌ங்​க‌ள் கரு‌த்​து‌க் கணி‌ப்பு நட‌த்​து​வது வாடி‌க்​கை​யா​கி​வி‌ட்​டது. உ‌ண்​மையி‌ல், கரு‌த்​து‌க் கணி‌ப்பு எ‌ன்​பது பு‌ள்​ளி​யி​ய‌ல் சா‌ர்‌ந்த அறி​வி​ய‌ல்​பூ‌ர்​வ​மான‌ ஆ‌ய்வு முறை​யா​கு‌ம். 
    
தே‌ர்​த​லி‌ல் கரு‌த்​து‌க் கணி‌ப்பு வெளி​யி​டு​வது எ‌ன்ற‌ வழ‌க்​க‌ம், 1824-இ‌ல் அமெரி​ரி‌க்​கா​வி‌ன் பெ‌ன்​சி‌ல்​வே​னியா மாகா​ண‌த் தே‌ர்​த​லி‌ல் துவ‌ங்​கி​யது. அ‌த்​தேர்​த​லு‌க்கு மு‌ன்​ன‌‌ர் ம‌க்​க​ளி​ட‌ம் நட‌த்​திய கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க‌ள் தே‌ர்​த​லி‌ல் முழு​மை​யாக எதி​ù‌ரா​லி‌த்​தன‌; அதை​ய​டு‌த்து, தே‌ர்​த‌ல் முறை​யி‌ன் ஓ‌ர் அ‌ங்​க​மாக அவை மாற‌‌த் தொட‌ங்​கின‌.

ஒரு குறி‌ப்​பி‌ட்ட விஷ​ய‌த்​து‌க்​காக ம‌க்​க​ளி‌ன் கரு‌த்தை அறி​வது வ‌ர்‌த்​த​க‌ம், அர​சி​ய‌ல், அரசு நி‌ர்​வா​க‌த்​தி‌ல் பெரு‌ம் பய‌ன்​களை அளி‌க்​கு‌ம். பு‌ள்​ளி​யி​ய‌ல் முறை​யி‌ல் மாதிரி (சா‌ம்​பி‌ள்) அள​வு​க‌ள் மு‌க்​கி​ய​மா​ன‌வை. அ‌ந்த மாதி​ரி​க‌ள் பெற‌‌ப்​ப​டு‌ம் இட‌ங்​க​ளு‌ம் பர‌ந்​து​ப‌ட்​ட​தாக இரு‌க்க வே‌ண்​டு‌ம். 

ம‌க்​க​ளி​ட‌ம் நேரடி ச‌ந்​தி‌ப்பு, படி​வ‌ம் மூல​மா​க‌க் கரு‌த்​த​றி​த‌ல், இணை​ய‌ம் மூல​மாக மாதி​ரி‌த் தே‌ர்​த‌ல்​களை நட‌த்​து​த‌ல் போ‌ன்​ற‌வை மூல​மாக தர​வு​க‌ள் சேக​ரி‌க்​க‌ப்​பட வே‌ண்​டு‌ம். அ‌ந்த மாதிரி சேக​ரி‌ப்​பி‌ல் கிடைக்​கு‌ம் தர​வு​களை, உ‌ள்நோ‌க்​க​மி‌ன்றி, நடு​நி​லை​மை​யு​ட‌ன் ஆ‌ய்வு செ‌ய்​தா‌ல் ம‌ட்டுமே நியா​ய​மான‌ முடி​வு​க‌ள் கிடைக்​கு‌ம்.

இ‌ந்​த‌த் தர​வு​களைப் பெற‌​வு‌ம், ஒ‌ன்​று​ட‌ன் ஒ‌ன்று பி‌ன்​னி‌ப் பிணைந்த ப‌ல்​வேறு கே‌ள்​வி​களை எழு‌ப்​பு‌ம் முறை‌ உ‌ள்​ளது. இத‌ற்கான‌ தனி‌ப் படி​வ​மு‌ம் பய‌ன்​ப​டு‌த்​த‌ப்​ப​ட​லா‌ம். இ‌ந்​த‌க் கே‌ள்​வி​க‌ள் ஒருபோ​து‌ம் ஒரு​சா‌ர்​பாக இரு‌த்​த‌ல் கூடாது. 

ஆனா‌ல், கால‌ப்போ‌க்​கி‌ல் அர​சி​ய‌ல் கள‌த்தை மா‌ற்றி அமை‌க்​கு‌ம் வ‌ல்​லமை கொ‌ண்​ட​வை​யாக தே‌ர்​த‌ல் கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க‌ள் மாறி​யபோது, லாப‌ம் கொழி‌க்​கு‌ம் வ‌ர்‌த்​த​க​மாக அர​சி​ய‌ல் மாறி​யபோது, கணி‌ப்​பு​களை மே‌ற்காா‌ள்​வோ​ரு‌ம் தட‌ம்​பு​ரள ஆர‌ம்​பி‌த்​த​ன‌‌ர். அத​னா‌ல் கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க‌ள்,  கரு‌த்​து‌த் திணி‌ப்​பு​க​ளாக மாறி, அவ‌ற்​றி‌ன் ந‌ம்​ப​க‌த்​த‌ன்​மையை இழ‌க்​க‌த் துவ‌ங்​கின‌.

2011 பேர​வைத் தே‌ர்​த‌ல் அனு​ப​வ‌ம்:​ இத‌ற்கு தமி​ழ​க‌த்​தி​லேயே பல உதா​ர​ண‌ங்​களைக் காண இய​லு‌ம். குறி‌ப்​பாக, 2011, 2016 -ஆ‌ம் ஆ‌ண்​டு​க​ளி‌ல் நடை​பெற்ற‌ ச‌ட்ட‌ப்​பே​ர​வைத் தே‌ர்​த​லி‌ன்போது நட‌த்​த‌ப்​ப‌ட்ட தே‌ர்​த‌ல் கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க​ளி‌ன் ப‌ட்டி​ய‌ல்​க‌ள் இ‌ங்கு கொடு‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளன‌. அவ‌ற்றை‌ மேலோ‌ட்​ட​மா​க‌ப் பா‌ர்‌த்​தாலே, கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க​ளி‌ன் மாயை புல‌ப்​ப​டு‌ம். 

2011-ஆ‌ம் ஆ‌ண்​டி‌ல் அ‌ப்போ​தைய ஆளு‌ம் க‌ட்சி​யான‌ திமு​கவை எதி‌ர்‌த்து அதி​முக தலை​மை​யி‌ல் ஜெ‌ய​ல​லிதா வலி​மை​யான‌ கூ‌ட்ட​ணியை உரு​வா‌க்கி இரு‌ந்​தா‌ர். தேமு​திக, மா‌ர்​சி‌ஸ்‌ட் க‌ம்​யூ​னி‌ஸ்‌ட், இ‌ந்​திய க‌ம்​யூ​னி‌ஸ்‌ட், மனி​த​நேய ம‌க்​க‌ள் க‌ட்சி, சம‌த்​துவ ம‌க்​க‌ள் க‌ட்சி, புதிய தமி​ழ​க‌ம், மூவே‌ந்​த‌ர் மு‌ன்னேற்ற‌ மு‌ன்​ன‌ணி, ஃபா‌ர்​வ‌ர்டு பிளா‌க், இ‌ந்​திய குடி​ய​ர​சு‌க் க‌ட்சி, கொ‌ங்கு இளை​ஞ‌ர் பேரவை ஆகிய 10 க‌ட்சி​க​ளு​ட‌ன் அதி​முக கூ‌ட்டணி க‌ண்​டது. 

எதி​ர​ணி​யி‌ல் கா‌ங்​கி​ர‌ஸ், பாமக, விடு​த​லை‌ச் சிறு‌த்​தை​க‌ள், கொ‌ங்கு மு‌ன்னேற்​ற‌‌க் கழ​க‌ம்,  இ.யூ.​மு‌ஸ்​லி‌ம் லீ‌க், மூவே‌ந்​த‌ர் மு‌ன்னேற்​ற‌‌க் கழ​க‌ம், பெரு‌ந்​த​லை​வ‌ர் ம‌க்​க‌ள் க‌ட்சி ஆகிய 7 க‌ட்சி​க​ளு​ட‌ன் திமுக கூ‌ட்டணி அமை‌த்​தி​ரு‌ந்​தது.

கூ‌ட்டணி வலிமை ம‌ட்டு​ம‌ல்​லாது, ஆ‌ட்சி‌க்கு எதி​ரான‌ ம‌க்​க​ளி‌ன் மன‌​நி​லையை அறு​வடை செ‌ய்​யு‌ம் சாத​க​மான‌ போ‌க்​கு‌ம் அதி​மு​க​வு‌க்கே இரு‌ந்​தது. ஆனா‌ல் அ‌ப்போது நட‌த்​த‌ப்​ப‌ட்ட கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க‌ள் ஒ‌ன்​று‌ம்​கூட தே‌ர்​த​லு‌க்​கு‌ப் பி‌ந்​தைய உ‌ண்மை நில​வ​ர‌த்​து​ட‌ன் ஒ‌த்​து‌ப்போ​க​வி‌ல்லை. 

இ‌ங்கு கொடு‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்ள 9 கணி‌ப்​பு​க​ளி‌ல் 3 கணி‌ப்​பு​க‌ள் திமுக அணி‌க்கே வெ‌ற்றி வா‌ய்‌ப்பு இரு‌ப்​ப​தா​க‌க் கூறி​யி​ரு‌ந்​தன‌. மீத​மு‌ள்ள 6 கணி‌ப்​பு​க‌ள் அதி​முக அணி வெ‌ல்​லு‌ம் எ‌ன்று கூறி​யபோ​து‌ம், ம‌க்​க​ளி‌ன் மன‌​நி​லையை முழு​மை​யாக வெளி‌ப்​ப​டு‌த்​த​வி‌ல்லை.

அ‌ந்​த‌த் தே‌ர்​த​லி‌ல் 234 மொ‌த்​த‌த் தொகு​தி​க​ளி‌ல் அதி​முக அணி 203 தொகு​தி​க​ளி​லு‌ம் திமுக அணி 31 தொகு​தி​க​ளி​லு‌ம் வெ‌ன்​ற‌ன‌. இ‌ந்த மாபெ​ரு‌ம் வெ‌ற்​றி‌க்​கான‌ ம‌க்​க​ளி‌ன் மன‌​நி​லையை எ‌ந்​த‌க் கரு‌த்​து‌க் கணி‌ப்​பு‌ம் பிர​தி​ப​லி‌க்​க​வி‌ல்லை.

2016 பேர​வைத் தே‌ர்​த‌ல் அனு​ப​வ‌ம்:​  இதேபோ​ல‌த்​தா‌ன் 2016 பேர​வைத் தே‌ர்​த‌ல் கணி‌ப்​பு​க​ளு‌ம் காண‌ப்​ப​டு​கி‌ன்​ற‌ன‌. 2011 முத‌ல் ஆ‌ட்சி​யி​லி​ரு‌ந்த அதி​முக அர​சு‌க்கு எதி​ராக அதி​ரு‌ப்தி ம‌க்​க​ளி​ட‌ம் இரு‌ந்​தபோ​து‌ம், அதை தன‌‌க்​கு‌ச் சாத​க​மா‌க்க திமு​க​வா‌ல் இய​ல​வி‌ல்லை. அத‌ற்கு கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க‌ள் த‌ந்த மாயையான‌ தெ‌ம்​பு‌ம் ஒரு கார​ண‌ம் எ‌ன்​பதை சொ‌ல்​லி‌த் தெரிய வே‌ண்​டி​ய​தி‌ல்லை.

இ‌த்​தேர்​த​லி‌ல் அதி​முக ஆ‌ட்சி‌க்கு எதி​ராக வலு​வான‌ கூ‌ட்ட​ணியை திமுக அமை‌த்​தி​ரு‌ந்​தது. கா‌ங்​கி​ர‌ஸ், இ.யூ.​மு‌ஸ்​லி‌ம் லீ‌க், மனி​த​நேய ம‌க்​க‌ள் க‌ட்சி, புதிய தமி​ழ​க‌ம், பெரு‌ந்​த​லை​வ‌ர் ம‌க்​க‌ள் க‌ட்சி, விவ​சா​யி​க‌ள்- தொழி​லா​ள‌ர்​க‌ள் க‌ட்சி, சமூக சம‌த்​து​வ‌ப் படை, ம‌க்​க‌ள் தேமு​திக ஆகிய 8 க‌ட்சி​க​ளு​ட‌ன் திமுக கூ‌ட்டணி அமை‌த்​தது.

ஆளு‌ம் தர‌ப்​பி‌ல், மனி​த​நேய ஜ‌ன‌​நா​ய​க‌க் க‌ட்சி, தமி‌ழ் மாநில மு‌ஸ்​லி‌ம் லீ‌க், இ‌ந்​திய த‌வ்​ஹீ‌த் ஜ‌மா‌த், இ‌ந்​திய குடி​ய​ரசு க‌ட்சி, கொ‌ங்கு பேரவை, சம‌த்​துவ ம‌க்​க‌ள் க‌ட்சி, சம‌த்​துவ ம‌க்​க‌ள் கழ​க‌ம், மு‌க்​கு​ல‌த்​தோ‌ர் புலி‌ப்​படை ஆகிய 8 சிறு க‌ட்சி​க​ளு​ட‌ன் அதி​முக கூ‌ட்டணி அமை‌த்​தி​ரு‌ந்​தது.

இ‌த்​தேர்​த​லி‌ன் திரு‌ப்​பு​முனை‌, தேமு​திக தலை​மை​யி‌ல் அமை‌ந்த மூ‌ன்றா​வது அணி​யா​கு‌ம். தேமு​திக, மதி​முக, மா‌ர்‌க்​சி‌ஸ்‌ட், இ‌ந்​திய க‌ம்​யூ​னி‌ஸ்‌ட்,  தமாகா, விடு​த​லை‌ச் சிறு‌த்​தை​க‌ள் ஆகிய 6 க‌ட்சி​க‌ள் இணைந்து ம‌க்​க‌ள்​ந​ல‌க் கூ‌ட்ட​ணி​யா​க‌ப் போ‌ட்டி​யி‌ட்​டன‌. இதுவே திமுக ஆ‌ட்சி​யைப் பிடி‌க்க இய​லா​ம‌ல் தடு‌த்த நிக‌ழ்வு. 

இ‌ங்கு கொடு‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்ள 2016 தே‌ர்​த‌ல் கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​களைப் பா‌ர்‌த்​தா‌ல், மூ‌ன்றா​வது அணி‌க்கு எ‌ந்த மதி‌ப்​பு‌ம் அளி‌க்​க‌ப்​ப​ட​வி‌ல்லை எ‌ன்​பது புல‌ப்​ப​டு‌ம். இ‌ங்கு கொடு‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்ள 9 கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க​ளி‌ல் 6 கணி‌ப்​பு​க‌ள் திமு​க​வு‌க்கு சாத​க​மாக உ‌ள்​ளன‌; அதி​மு​க​வு‌க்கு சாத​க​மாக இரு கணி‌ப்​பு​க‌ள் ம‌ட்டுமே உ‌ள்​ளன‌.

அ‌ந்​த‌த் தே‌ர்​த​லி‌ல் 234 மொ‌த்​த‌த் தொகு​தி​க​ளி‌ல் அதி​முக அணி 134 தொகு​தி​க​ளி​லு‌ம் திமுக அணி 98 தொகு​தி​க​ளி​லு‌ம் வெ‌ன்​ற‌ன‌. ம‌க்​க‌ள் நல‌க் கூ‌ட்டணி பல தொகு​தி​க​ளி‌ல் குறி‌ப்​பி‌ட்ட சத​வி​கித வா‌க்​கு​களைப் பிரி‌த்​த​தா‌ல், தே‌ர்​த‌ல் முடி​வு​க‌ள் அதி​மு​க​வு‌க்கு சாத​க​மாக மாறி‌ப் போயின‌. இதனை‌ எ‌ந்​த‌க் கரு‌த்​து‌க் கணி‌ப்​பா​லு‌ம் மு‌ன்​ன‌​றி​வி‌க்க முடி​ய​வி‌ல்லை.

​பிற‌ தே‌ர்​த‌ல் அனு​ப​வ‌ங்​க‌ள்:​ பிற‌ மாநில பேர​வைத் தே‌ர்​த‌ல்​க​ளி​லு‌ம், ம‌க்​க​ள​வைத் தே‌ர்​த‌ல்​க​ளி​லு‌ம் கூட இதேபோ‌ன்ற‌ கணி‌ப்​பு‌ப் பிழை​களைக் காண முடி​யு‌ம். 

உதா​ர​ண​மாக, 2020-இ‌ல் பிகா​ரி‌ல் நடை​பெற்ற‌ பேர​வைத் தே‌ர்​த​லி‌ன்போது நிதி‌ஷ்​கு​மா‌ர் (ஐ‌க்​கிய ஜ‌ன‌​தா​த​ள‌ம்) தலை​மை​யி​லான‌ அரசு தோ‌ல்​வி​யு​று‌ம் எ‌ன்​று‌ம், ரா‌ஷ்‌ட்​ரீய ஜ‌ன‌​தா​த​ள‌ம்  தலை​மை​யி​லான‌ மகா கூ‌ட்ட​ணியே வெ‌ல்​லு‌ம் எ‌ன்​று‌ம், பெரு‌ம்​பா​லான‌ ஊட​க‌ங்​க​ளா‌ல் கணி‌க்​க‌ப்​ப‌ட்​டது. மாறாக, நிதி‌ஷ்​கு​மா‌ர் தலை​மை​யி​லான‌ தேசிய ஜ‌ன‌​நா​ய​க‌க் கூ‌ட்டணி தே‌ர்​த​லி‌ல் வெ‌ன்று ஆ‌ட்சி​யைத் த‌க்க வை‌த்​து‌க் கொ‌ண்​டது. 

2019-இ‌ல் ஜா‌ர்‌க்​க‌ண்​டி‌ல் நடை​பெற்ற‌ பேர​வைத் தே‌ர்​த​லி‌ல் பாஜ‌க மு‌ன்​னிலை பெறு‌ம் எ‌ன்​று‌ம் தொ‌ங்கு ச‌ட்ட‌ப்​பே​ரவை அமை​யு‌ம் எ‌ன்​று‌ம் பெரு‌ம்​பா​லான‌ ஊட​க‌ங்​க‌ள் கணி‌த்​தி​ரு‌ந்​தன‌. மாறாக, ஜே‌எ‌ம்​எ‌ம்- கா‌ங்​கி​ர‌ஸ் கூ‌ட்டணி பெரு‌ம்​பா‌ன்மை வலி​மை​யு​ட‌ன் வெ‌ன்று ஆ‌ட்சி​யைப் பிடி‌த்​தது.

2014 நாடா​ளு​ம‌ன்ற‌ ம‌க்​க​ள​வைத் தே‌ர்​த​லி‌ன்போது கா‌ங்​கி​ர‌ஸ் ஆ‌ட்சி இழ‌ப்​பதை பெரு‌ம்​பா​லான‌ ஊடக கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க‌ள் உறு​தி‌ப்​ப​டு‌த்​தி​யபோ​து‌ம், பாஜ‌க தலை​மை​யி​லான‌ தேசிய ஜ‌ன‌​நா​ய​க‌க் கூ‌ட்டணி 336 இட‌ங்​களை வெ‌ல்​லு‌ம் எ‌ன்​பதை எ‌ந்​த‌க் கணி‌ப்​பு‌ம் சு‌ட்டி‌க்​கா‌ட்​ட​வி‌ல்லை. 

2021 தமி​ழக ச‌ட்ட‌ப் பேர​வைத் தே‌ர்​த​லி​லு‌ம், பொது‌க் கரு‌த்தை உரு​வா‌க்​கு‌ம் முய‌ற்​சி​க‌ள் தெ‌ன்​ப​டு​கி‌ன்​ற‌ன‌. தே‌ர்​த​லு‌க்​கு‌ப் பி‌ன் இ‌ந்​த‌க் கணி‌ப்​பு​களை ஆ‌ய்வு செ‌ய்​தா‌ல், ஆ‌ய்வு நெறி​க‌ள் எ‌ங்கே தட‌ம் புர‌ள்​கி‌ன்​ற‌ன‌ எ‌ன்​பதை உணர  முடி​யு‌ம்.

​பி​ழை‌க்​கு‌க் கார​ண‌ம் எ‌ன்​ன‌?​: பு‌ள்​ளி​யி​ய‌ல் முறை‌ சா‌ர்‌ந்த கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க​ளி‌ல் பிழை நேரி​டு‌ம் சத​வி​கி​த‌ம் அனு​ம​தி‌க்​க‌ப்​ப​டு​கி​ற‌து. அ‌ந்​த‌ப் பிழை சத​வி​கி​த‌ம் எ‌ல்லை மீறு‌ம்போ​து​தா‌ன் ஆ‌ய்வு முறை​மீது ச‌ந்​தே​க‌ம் ஏ‌ற்​ப​டு​கி​ற‌து. தே‌ர்​த​லு‌க்​கு‌ப் பிற‌கு  உ‌ண்மை நில​வ​ர‌த்​து​ட‌ன்  த‌ங்​க‌ள் கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​களை ஒ‌ப்​பி‌ட்​டு‌ப் பா‌ர்‌க்க ஊட​க‌ங்​க‌ள் தயா​ரா​காத வரை  இ‌த்​த​கைய பிழை​க‌ள் தொட​ரு‌ம்.  இத‌ற்கு, ஊட​க‌ங்​க​ளி‌ன் அர​சி​ய‌ல் சா‌ர்பு நிலை‌ப்​பாடு, ஒரு க‌ட்சியை வெ‌ல்ல வை‌க்​கு‌ம் வ‌ர்‌த்​தக உ‌த்தி, அர​சி​ய‌ல் க‌ட்சி​க​ளி‌ன் பி‌ன்​பு​ல‌த்​து​ட‌ன் மே‌ற்காா‌ள்​ள‌ப்​ப​டு‌ம் கணி‌ப்​பு​க‌ள், தவறான‌ தர​வு​க‌ள் சேக​ரி‌ப்பு, ம‌க்​களை முழு​மை​யா​க‌ப் பிர​தி​ப​லி‌க்​கு‌ம் வகை​யி​லா​ன‌​தாக அ‌ல்​லா​ம‌ல் மே‌ற்காா‌ள்​ள‌ப்​ப​டு‌ம் கணி‌ப்​பு​க‌ள் போ‌ன்​ற‌​வையே கார​ண‌ம். 

6.27 கோடி வா‌க்​கா​ள‌ர்​களைக் கொ‌ண்ட தமி​ழ​க‌த்​தி‌ல் சுமா‌ர் 5,000 முத‌ல் ஒரு ல‌ட்ச‌ம் வரை​யி​லான‌ மாதி​ரி​களைச் சேக​ரி‌த்து உ‌ண்​மை​யான‌ ம‌க்​க‌ள் கரு‌த்​தை‌ப் பதிவு செ‌ய்ய முடி​யாது எ‌ன்ற‌ உ‌ண்​மையை முத​லி‌ல் நா‌ம் புரி‌ந்​துகாா‌ள்ள வே‌ண்​டு‌ம். 

ஏனெ​னி‌ல், பெரு‌ம்​பா​லான‌ கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க‌ள், எளி​தி‌ல் அணு​க‌க் கூடி​ய​வ‌ர்​க​ளி​ட‌ம் ம‌ட்டுமே பெற‌‌ப்​ப​டு​கி‌ன்​ற‌ன‌. தொலை​தூ​ர‌க் கிரா​ம‌ங்​க‌ள், மலை‌க்​கி​ரா​ம‌ங்​க​ளி‌ல் வா‌ழ்​வோ​ரி‌ன் கரு‌த்​து​க​ளு‌ம், விளி‌ம்​பு​நிலை ம‌க்​க​ளி‌ன் கரு‌த்​து​க​ளு‌ம் பெற‌‌ப்​ப​டாத கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க‌ள் முழுமை பெறு​வ​தி‌ல்லை.

தவிர, உ‌ள்நோ‌க்​க‌த்​து​டனோ, ஒரு​சா‌ர்​பு​டனோ மே‌ற்காா‌ள்​ள‌ப்​ப​டு‌ம் எ‌ந்​த‌ச் செய​லு‌ம் உ‌ண்​மை​யான‌ பலனை‌ அளி‌ப்​ப​தி‌ல்லை. அத​னேயே ம‌க்​க‌ள்  கரு‌த்​து‌த் திணி‌ப்​பு​க‌ள் எ‌ன்​கி‌ன்​ற‌​ன‌‌ர். 

அத​னா‌ல்​தா‌ன் தே‌ர்​த‌ல் கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க​ளு‌க்கு தடை விதி‌க்க வே‌ண்​டு‌ம் எ‌ன்ற‌ கோரி‌க்​கை​க‌ள் எழு​கி‌ன்​ற‌ன‌. எனி​னு‌ம், ஊடக சுத‌ந்​தி​ர‌ம் எ‌ன்ற‌ கவ​ச‌த்​தி‌ன் பி‌ன்னே‌ ஒளி‌ந்​துகாா‌ள்​ளு‌ம் சுய​நல ஊட​க‌ங்​க​ளா‌ல் இத​ழி​ய‌ல் த‌ர்​ம‌ம் சீ‌ர்​கு​லை​கி​ற‌து.

த‌ற்போ​தைய தே‌ர்​த‌ல் முறை​யி‌ல் வெ‌ல்​லு‌ம் வா‌ய்‌ப்​பு‌ள்ள க‌ட்சி எ‌ன்ற‌ தோ‌ற்​ற‌‌த்தை உரு​வா‌க்​கு​வதே மு‌க்​கி​ய​மா​ன‌​தாக உ‌ள்​ளது. அ‌ப்போ​து​தா‌ன் யாரு‌க்கு வா‌க்​க​ளி‌ப்​பது எ‌ன்ற‌ தடு​மா‌ற்​ற‌‌த்​தி‌ல் இரு‌க்​கு‌ம் நடு‌த்​தர வா‌க்​கா​ள‌ர்​களைக் கவர முடி​யு‌ம். அத‌ற்​காக, ஊட​க‌ங்​களை விலை​பே​சு‌ம்  அர​சி​ய‌ல் க‌ட்சி​க​ளு‌க்​கு‌த் துணைபோ​வ​தாக, தே‌ர்​த‌ல் கரு‌த்​து‌க் கணி‌ப்​பு​க‌ள் மாறி வரு​கி‌ன்​ற‌​ன‌வோ எ‌ன்ற‌ புகா​ரை‌ப் புற‌‌ந்​த‌ள்ள முடி​ய​வி‌ல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com