அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

திருச்சி புறப்பட்டார் விஜய்! சற்று நேரத்தில் வேட்பு மனு தாக்கல்!

திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளது பற்றி...

News image

விஜய் (கோப்புப்படம்)

ANI

Updated On :2 ஏப்ரல் 2026, 4:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புறப்பட்டார்.

தவெக தலைவா் விஜய் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், சென்னை பெரம்பூா் தொகுதியில் கடந்த திங்கள்கிழமை அவா் வேட்பு மனுதாக்கல் செய்தாா்.

இந்த நிலையில், திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் இன்று காலை திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

இதற்கான சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.30 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து, திருச்சி மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே பகல் 12.30 மணிக்கு மேல் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

டிவிஎஸ் டோல்கேட், கே.கே.நகா் மற்றும் விமான நிலையம் ஒயா்லஸ் சாலை உள்ளிட்ட இடங்களிலும் பிரசாரத்துக்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், திருச்சி காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.