சென்னை பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரம் வெளியானது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று(மார்ச் 30) தொடங்கிய நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று(மார்ச் 30) தவெக தலைவர் விஜய் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள்:
விஜய்யின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 404.58 கோடி, சுயமாக வாங்கிய அசையா சொத்து மதிப்பு ரூ. 92 கோடி என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசையா சொத்தின் நடப்பு சந்தை மதிப்பு ரூ. 220 கோடி எனவும், சென்னை போரூர், நீலாங்கரை, சாலிகிராமத்தில் வேளாண்மை அல்லாத நிலங்கள் உள்ளதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் தனது வசம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாகவும், மனைவி சங்கீதா வசம் ரூ. 4.07 கோடியில் 3,132 கிராம் தங்கம், ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய் ஷோபனாவுக்கு ரூ. 87 லட்சமும் தந்தை சந்திரசேகரக்கு ரூ. 3 கோடியும் தவெக பொதுச் செயலர் ஆனந்திற்கு ரூ. 3 கோடியும் விஜய் கடன் அளித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ 530 உள்பட சுமார் ரூ. 6 கோடியில் 5 ஆடம்பர கார்கள் வைத்துள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். விஜய் தன் பெயரில் குற்றவியல் வழக்குகள், தண்டனை பெற்ற வழக்குகள் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தான் ரூ. 3.43 கோடி வருமான வரி நிலுவை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் பெயரில் உள்ள வாகனங்களில் அதிகபட்சமாக ரூ. 3 கோடி மதிப்புள்ள டொயோட்டா லெக்சஸ் கார் உள்ளது. குறைந்தபட்ச மதிப்பாக ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள டிவிஎஸ் எக்ஸல் சூப்பர் இரு சக்கர வாகனங்கள் உள்ளன.
விஜய்யின் கல்வித் தகுதி பிஎஸ்சி இடைநிற்றல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் வித்யாசிரம் பள்ளியில் தாளாளராக இருப்பதாகவும் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Summary
The details regarding the assets declared by TVK leader Vijay in his nomination papers, filed in Perambur, Chennai, have been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் விஜய், உதயநிதி ஸ்டாலின், தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

உலகின் முதல் டிரில்லியனரான எலான் மஸ்க்!

ஒரு லட்சம் கோடி!! எலான் மஸ்க் சொத்து மதிப்பு இவ்வளவா?

பங்குச் சந்தை சரிவு எதிரொலி: ஒரே நாளில் ரூ. 6.31 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |




