கோவை: தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக சுயேச்சை வேட்பாளராக எஸ்.பி. வேலுமணி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில், அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி ஆதரவு வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், சுயேச்சையாக எஸ்.பி. வேலுமணி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த எஸ்.பி. வேலுமணி?
கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளநிலை வேதியியல் பட்டதாரியான சுயேச்சை வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி (வயது 45) எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
'டைம் ஆஃப் ஃப்ரீடம்' என்ற மாத இதழின் நிறுவனராக இருக்கும் இவர், மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் டெக்னிக்கல் மேனேஜராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது தந்தை காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், இவரது சகோதரி சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாகத் தேர்தல் காலங்களில் முக்கிய வேட்பாளர்களின் வாக்குகளைப் பிரிக்க, அதே பெயர் கொண்ட நபர்களைக் களமிறக்குவது ஒரு அரசியல் தந்திரமாகக் கருதப்படும் சூழலில், இந்த வேலுமணியின் வருகை தொண்டாமுத்தூர் அ.தி.மு.க வில் சிறு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
2011 சட்டப்பேரவைத் தேர்தல் முதல் தொடர்ந்து மூன்று முறை தொண்டாமுத்தூரில் போட்டியிட்டு அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி வெற்றி பெற்றுள்ளார். அதற்கு முன்னதாக, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை பேரூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
இவருக்கு எதிராக திமுக வேட்பாளராக என்.ஆர். கார்த்திகேயன், தவெக வேட்பாளராக சதீஷ் ராஜு களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
S.P. Velumani Enters the Fray Against Ex Miniter S.P. Velumani in Thondamuthur!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
'நான்தான் எல்லாம்' என்பது கூடாது! இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணி
எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பு வலியுறுத்தல்

இபிஎஸ்ஸை முதல்வராக்கியது சசிகலாதான்! அதிமுகவில் பிரிந்தவர்கள் சேர வேண்டும்! எஸ்.பி. வேலுமணி








