காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலை

பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...

News image

அண்ணாமலை

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 9:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியில், அவிநாசியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை, கோவை வடக்கில் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள, பாஜகவைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல், செயலற்றத்தன்மை மற்றும் திமுகவின் துரோகம் ஆகியவற்றால் சலிப்படைந்துள்ள தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவையும் இவர்கள் பெற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பிரம்மாண்டத்துடனும், ஒரு தெளிவான நோக்கத்துடனும் முன்னேறி வருகிறது. நாடு இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவம் நிறைந்த மற்றும் சுயநலம் மட்டுமே கொண்ட திமுக அரசால் தமிழ்நாடு பின்தள்ளப்பட்டுள்ளது.

ஒரு கட்சித் தொண்டனாக, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், நமது வெற்றி வேட்பாளர்களான பாஜக மற்றும் பிற தே.ஜ. கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால், அந்த தொகுதி வானதி சீனிவாசனுக்கு ஒதுக்க கட்சித் தலைமை முடிவெடுத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமை வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால், கோவை வடக்கு தொகுதி கிடைக்கவில்லை என்றால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.