திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி! தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

தமிழகத்தில் இருமுனைப் போட்டிதான்; திமுக - காங். கூட்டணிக்குள் குழப்பம்! அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி

News image

அண்ணாமலை - X

Updated On :10 ஏப்ரல் 2026, 3:55 pm IST

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் இருப்பதாகவும் புதுவையில் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஸ்டாலின் பெயரையே சொல்லவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

உதகையில் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை,

"தமிழகம் முழுவதும் அதிமுக - பாஜவினர் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு எந்த கட்சியிலும் இதனை நாங்கள் பார்க்கவில்லை.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோவை வந்து அங்கிருந்து பாலக்காடு செல்கிறார். விமான நிலையம் இருக்கக்கூடியது கோவை கவுண்டம்பாளையம் தொகுதி, அது காங்கிரஸ் வேட்பாளருடையது. ஆனால் ராகுல் வெளியில் வந்து பிரசாரம் செய்யவில்லை.

புதுவையில் ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் ஸ்டாலின் என்ற பெயரையே சொல்லவில்லை. அதுபோல முதல்வர் ஸ்டாலின், ராகுல் என்ற பெயரைச் சொல்லவில்லை. இதனைப் பார்க்கும்போது கூட்டணிக்குள் எவ்வளவு குழப்பம் இருக்கிறது என்று தெரிகிறது.

ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி ஒற்றுமையுடன் இருக்கிறோம். விஜய், சீமான் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். ஆனால், போட்டி என்பது தமிழகத்தில் இருமுனைப் போட்டிதான். திமுக கூட்டணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்தான் போட்டி.

இபிஎஸ் பேசியதை கனிமொழி திரித்துப் பேசுகிறார். இபிஎஸ் பற்றி உதயநிதி தரக்குறைவான, ஆபாசமான பேச்சு" என்று கூறினார்.

Summary

Bipolar Contest in Tamil Nadu; Confusion within the DMK-Congress Alliance: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.