ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை

தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

annamalai

கே. அண்ணாமலை. - கோப்புப் படம்

Published On :

தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் 5 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். தமிழ்நாட்டில் கொலைகாரர்கள், போதைப்பொருள், பாலியல் கடத்தல்காரர்கள், வன்கொடுமை செய்பவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

மாநில காவல்துறை கடந்த கால நிகழ்வுகளில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. புதிய தவெக அரசு தனது வெற்றிக் கொண்டாட்ட பாணியில் இருந்து வெளிவந்து, களத்தில் அரங்கேறி வரும் இந்த மோசமான உண்மைகளை எதிர்கொள்ள இன்னும் தொடங்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக திங்கள்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

Summary

Former BJP state president Annamalai has criticized that the Tamil Nadu Police does not seem to have learned any lesson.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.