சென்னை: ஊழல் செய்யவதற்காகவே திட்டங்களை கொண்டு வந்து, மக்களை அவதி அடைய செய்யும் தீயசக்தி திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி என பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களம் காணும் மருத்துவர் தமிழிசையை ஆதரித்து திங்கள்கிழமை மயிலாப்பூர் திருவள்ளுவர் சாலை, விசாலாட்சி தோட்டம், மந்தைவெளி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியது:
கடந்த 5 ஆண்டுகால, தீயசக்தி திமுகவின் காட்டாட்சியில் 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்தது தான் திமுக தனது ஆட்சியில் செய்துள்ள ஒரே சாதனை.
தமிழகத்தின் தலைநகரமாக திகழும் சிங்கார சென்னையை, “மூழ்கிக்கொண்டிருக்கும்” சென்னையாக மாற்றி மழைநீர் வடிகால் என்ற பெயரில் திமுகவினர் ரூ.4000 கோடி முறைகேடு செய்யவே ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்கள். சென்னை மக்கள் கோடிக்கணக்கில் வரிமேல் வரி செலுத்தியும் சாலைகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் கூட அவல நிலையில் தான் இன்றும் இருக்கிறது என்பது வெட்கக்கேடு. கொள்ளையடிக்கவும், ஊழல் செய்யவும் மட்டுமே திட்டங்களை கொண்டு வந்து, மக்களை அவதி அடைய செய்யும் தீயசக்தி திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி.
எனவே, மாற்றத்தின் நம்பிக்கையாக, மக்களாட்சியின் அடையாளமாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மயிலாப்பூர் தொகுதி பாஜக வெற்றி வேட்பாளர் தமிழிசைக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களித்து மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.
Summary
It is certain that the people of Tamil Nadu will drive out the DMK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தை வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்ல அண்ணாமலை வலியுறுத்தல்

பாஜக மாநில துணைத் தலைவர் விலகல்... ‘அண்ணாமலைக்கு அணிலாக இருப்போம்’ என பேட்டி!

தமிழ்நாடு திரும்பாத அண்ணாமலை! தில்லியில் என்ன நடக்கிறது?

Podcast | அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்போகும் பாதை! | News and Views | Epi - 42 |
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



