மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ராகுல் கூட்டத்துக்கு அழைப்பில்லை; அதனால் செல்வப்பெருந்தகை நாடகமாடுகிறார்! - அண்ணாமலை

செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித் துறை சோதனை பற்றி அண்ணாமலை கருத்து...

No Invitation to Rahul's Meeting; Selvaprerunthagai Is Putting on a Drama: Annamalai

கே. அண்ணாமலை. - படம்: எக்ஸ்.

Published On :

ராகுல் காந்தியின் கூட்டத்துக்கு அழைப்பு இல்லாததால் செல்வப்பெருந்தகை, வருமானவரித் துறை சோதனை என்று நாடகமாடுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் நாளை(ஏப். 21) மாலையுடன் நிறைவு பெறவுள்ளது. பிரசாரத்திற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு இன்று இரண்டாவது முறையாக வந்துள்ளார்.

இதனிடையே, சோதனை என்ற பெயரில் ஹிந்தி பேசக் கூடிய அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தன்னை சிறைபிடித்து வைத்து பிரசாரம் செய்வதை முடக்கியிருப்பதாக செல்வப்பெருந்தகை கூறினார். இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை, 'ராகுல் காந்தி தமிழகத்துக்கு வருவது உங்களுக்கு பிடிக்கவில்லையா? இல்லை தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவராக நான் அதை ஏற்பாடு செய்ய வேண்டாம் எனத் தடுக்கிறீர்களா?. பாஜக, எங்களை கட்டிப் போட முடியாது. அச்சுறுத்தி, அடக்கிவிட முடியாது' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் கூட்டத்துக்கு அழைப்பு இல்லாததால் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, வருமானவரித் துறை சோதனை என்று நாடகமாடுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தியின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல்காந்தி பேசியதற்கு சற்றும் தொடர்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை எல்லாம் அடித்து விட்ட உண்மை, இன்றுதான் ராகுல் காந்திக்குத் தெரிந்திருக்கிறது போலும்.

செல்வப்பெருந்தகையை இனிமேல் எனது கூட்டத்தின் பக்கமே விடாதீர்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால், இன்னும் அசிங்கமாகிவிடும் என்ற பதட்டத்தில் செல்வப்பெருந்தகை, இன்று காலை, தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டிற்குள்ளேயே சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு நாடகமாடினார். இதனை அடுத்து, வழக்கம்போல, சினிமா வசனங்கள் பேசி, முதலமைச்சர் ஸ்டாலினும் பொங்கல் வைக்க, தற்போது, சோதனை நடந்ததாக செல்வப்பெருந்தகை கூறியது முழுப் பொய் என்று, வருமான வரித்துறை தெளிவுபடுத்தியிருக்கிறது.

மேலும் தன்னை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்ததாகக் கூறிய செல்வப்பெருந்தகை வெளியே வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதிலிருந்து, அவர் கூறியது பொய் என்பது உறுதியாகியிருக்கிறது.

பள்ளி செல்லும் குழந்தைகள்போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை. அவரது நகைச்சுவையை நம்பி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் பொங்கல் வைத்திருப்பதுதான் உச்சகட்ட நகைச்சுவை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அடிப்படையான விஷயங்களைக்கூட சரிபார்க்காமல் வடக்கு, தெற்கு என்று வசனம் பேசுவது, அவரது தேர்தல் தோல்வி பயத்தைக் காட்டுகிறது. இந்த கூட்டணி, தமிழக மக்களை எத்தனை ஏமாளிகள் என்று எண்ணினால், இப்படி ஒரு பொய்யை துணிந்து சொல்வார்கள்?" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

No Invitation to Rahul's Meeting; Selvaprerunthagai Is Putting on a Drama: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.