137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன்

மேலூர் தொகுதி வேட்பாளராக காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. விஸ்வநாதனை காங்கிரஸ் அறிவித்துள்ளது

Melur constituency Congress candidate P. Viswanathan

பி. விஸ்வநாதன் - Photo grab Video.

Updated On :

மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி வேட்பாளராக காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. விஸ்வநாதனை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலூர் தொகுதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். தனக்கு பொது தொகுதி வேண்டும் என அண்மையில் விஸ்வநாதன் கேட்டிருந்த நிலையில் அவருக்கு மேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் பெரியபுள்ளான் என்கிற செல்வம், நாதக சார்பில் கோட்டைக்குமார், தவெக சார்பில் மதுரை வீரன் போட்டியிடுகின்றனர். மேலூர் தொகுதி வேட்பாளரான விஸ்வநாதன் தற்போது காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளராக உள்ளார்.

மேலூர் தொகுதி எனக்கு புதிதல்ல, அனைத்து கிராமங்களுக்கும் நடந்தே சென்றுள்ளேன் என்று விஸ்வநாதன் தெரித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 28 பேரவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Summary

Congress has announced former Kanchipuram MP Viswanathan as the candidate for the Melur constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.