பெரம்பூரைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது.
முதல் நாளே முதல்வர் வேட்பாளர்களான திமுக மு.க. ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோர் அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டிடுகிறார். திருச்சி கிழக்கில் ஏப். 2 ஆம் தேதி விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
வேட்புமனுவில் குற்ற வழக்குகள் தொடர்பான தகவல்கள் விடுபட்டதை தொடர்ந்து, பெரம்பூர் தொகுதியில் மீண்டும் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று (ஏப். 6) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 2,500-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனு பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய்யின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
Summary
TVK Leader Vijay's Nomination Accepted in Trichy East as Well!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன்
விஜய் ராஜிநாமா! திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!

திருச்சி கிழக்கில் சி. ஜோசப் விஜய் ராஜிநாமா!

விஜய் வேட்புமனு தாக்கல்; திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டி!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



