ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மத்திய அரசு சர்வாதிகாரியாக மாறத் துடிப்பதாக அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாக பாதிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கட்சியினர், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுவர் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், கொடிக்கம்பத்தில் கருப்பு கொடியை ஏற்றி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு தொகுதி மறுவரை மசோதாவின் நகலை அவர் தீயிட்டு கொளுத்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றிய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “ ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு மத்திய அரசு சர்வாதிகாரியாக மாறத் துடிக்கிறது. எந்த மாநிலத்தின் தயவும் இல்லாமல் தாங்கள் விரும்பிய சட்டங்களை இயற்றவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு நினைக்கிறது.
இந்தியாவை ஒரு கூட்டாட்சி நாடாக இருக்க விடாமல், சிறிது சிறிதாக ஒற்றை நாடாக மாற்றப் பார்க்கின்றனர். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு சர்வாதிகாரியாக இருக்கத் துடிக்கிறார்கள். இது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்தால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள்.
ஐந்து மாநில பேரவைத் தேர்தல்கள் நடைபெறும் இந்தச் சூழலில், இந்த மசோதாவைக் கொண்டு வருவது அவசியமா என மத்திய அரசைத்தான் கேட்க வேண்டும்.
மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. இதற்குக் காரணம், பாஜக விரித்த வலையில் அதிமுக முழுமையாக மாட்டிக்கொண்டுள்ளது” என்றார்.
முன்னதாக, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Summary
Minister Duraimurugan has sharply criticized the Central Government, alleging that it is eager to transform into a dictatorship after burying democracy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உண்ணாவிரதத்தைக் கைவிட்ட சோனம் வாங்சுக்! மத்திய அமைச்சர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறது தவெக அரசு: பி. கீதாஜீவன் குற்றச்சாட்டு

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



