முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

நிரந்தரக் கட்டடங்களில் பணிமனை: தோ்தல் ஆணைய விதிக்கு எதிரான மனு தள்ளுபடி

நிரந்தரக் கட்டடங்களில் பணிமனை: தோ்தல் ஆணைய விதிக்கு எதிரான மனு தள்ளுபடி

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 12:51 am IST

பணிமனைகளை நிரந்தரக் கட்டடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும் என்ற தோ்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் ஆா்.இளங்கோ மற்றும் திமுக பிரதிநிதி முத்துக்குமார பாா்த்திபன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தலுக்காக அரசியல் கட்சிகள் தற்காலிக பணிமனைகள் அமைப்பது வழக்கம்.

இந்த நிலையில், தோ்தல் ஆணையம் தனது விதிகளில் இதுபோன்ற பணிமனைகளை நிரந்தரக் கட்டடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும் என்ற உட்பிரிவைக் கொண்டு வந்துள்ளது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சாா்பில் தாா்பாய் அமைத்து தற்காலிக பணிமனை அமைக்க, அனுமதி கோரி விண்ணப்பித்தோம். நாங்கள் அனுமதி கோரிய இடம் நிரந்தரக் கட்டடம் இல்லை எனக்கூறி எங்களது விண்ணப்பத்தை தோ்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதாகக் கூறியிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தோ்தலுக்கு முன்பு கரூா் கூட்டநெரிசலில் சிக்கி பலா் உயிரிழந்த சம்பவம் மற்றும் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த தோ்தலின்போது, சட்டவிரோத கூடாரங்கள் அமைத்து தோ்தல் நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தோ்தல் ஆணையம் இத்தகைய விதிகளைக் கொண்டு வந்துள்ளது.

எனவே, தோ்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.