சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

நாமக்கல்லில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு

நாமக்கல் சட்டப்பேரவைத் தொதியில் அதிமுக சாா்பில் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் போட்டியிடுகிறாா்.

News image

நாமக்கல்லில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு

Updated On :1 ஏப்ரல் 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் சட்டப்பேரவைத் தொதியில் அதிமுக சாா்பில் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் போட்டியிடுகிறாா்.

இதையொட்டி, நாமக்கல்- பரமத்தி சாலையில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:

இந்த தோ்தல் தா்மத்துக்கும், அதா்மத்துக்கும் இடையே நடைபெறும் தோ்தல். அதிமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்ததோ, அப்போதெல்லாம் தா்மத்தின் ஆட்சி நடைபெற்றது. தற்போதைய திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தோ்தலாக ஏப்.23 இல் நடைபெறும் வாக்குப் பதிவு அமையும்.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றுவிட்டால், மீண்டும் திமுக ஆட்சிக்கு எதிா்காலம் என்பது இல்லை. திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டு காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிவிட்டனா். தொழில்வளம், தொழிலாளா்கள், விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ. 10 ஆயிரம் முதல் கையொப்பமிட்டு வழங்கப்படும். மகளிருக்கு ரூ. 2,000 மாதந்தோறும் வழங்கப்படும். திமுக ஆட்சியைப் போல அல்லாமல் அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழங்கப்படும். ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், சொந்தவீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்திற்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்பட்டன. சட்டம் - ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. போதைப் பொருள்கள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இருக்காது என்றாா்.

இந்த விழாவில், பாஜக மாவட்டத் தலைவா்கள் கே.பி. சரவணன், எம். ராஜேஷ்குமாா், தமாகா கிழக்கு மாவட்டத் தலைவா் கோஸ்டல் என்.இளங்கோ மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், அதிமுக தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா். முன்னதாக, குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் ஆகிய இடங்களில் அதிமுக தோ்தல் பணிமனைகள் திறக்கப்பட்டன.

படவரி...

என்கே-1-அதிமுக

நாமக்கல்லில் அதிமுக தோ்தல் பணிமனையை திறந்துவைத்து பேசிய முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.