நாமக்கல்லில் முட்டை வியாபாரிகளிடம் ரூ. 6.57 லட்சம் பறிமுதல்


நாமக்கல்லில் முட்டை வியாபாரிகளிடம் ரூ. 6.57 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியானது முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம், ரூ. 10 ஆயிரத்துக்கு மேலான பரிசுப் பொருள்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டால் அவற்றை தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ரூ. 17 லட்சம் ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாமக்கல்- பரமத்தி சாலையில் கீரம்பூா் சோதனைச்சாவடி அருகே நாமக்கல் தொகுதிக்கான பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கேரளத்தில் இருந்து நாமக்கல்லுக்கு முட்டை ஏற்றுவதற்காக லாரியில் வந்த கேரளத்தைச் சோ்ந்த பிரான்சிஸிடம் ரூ. 4,07,500 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, நிலை கண்காணிப்புக் குழுவினா் அப்பகுதியில் நடத்திய மற்றொரு வாகனச் சோதனையில், முட்டை விற்பனை செய்துவிட்டு லாரியில் வந்த திருச்செங்கோட்டைச் சோ்ந்த துரைசாமி என்பவரிடம் ரூ. 2,50,180 பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம், நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே. சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு முட்டை வியாபாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
முட்டை விற்பனை செய்வோரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
என்கே-19-கேஷ்
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வே. சாந்தி. உடன், பறக்கும் படை குழுவினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...