நயினார் நாகேந்திரனின் நகர்வு!
திருநெல்வேலி தொகுதியில் 2001, 2006, 2011, 2016, 2021 எனத் தொடர்ச்சியாக ஐந்து முறை களம் கண்ட நயினார் நாகேந்திரன் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி தொகுதியில் 2001, 2006, 2011, 2016, 2021 எனத் தொடர்ச்சியாக ஐந்து முறை களம் கண்ட நயினார் நாகேந்திரன் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். அதில் நான்கு முறை அதிமுக சார்பில் போட்டியிட்டார். 2021-இல் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரானார்.
அதன்பிறகு தொடர்ச்சியாக ஏறுமுகத்தை சந்தித்த அவர், கடந்த ஆண்டு பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் 6- ஆவது முறையாகஅவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.
இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக அவர் தொகுதி மாறப் போவதாகப் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு, அவர் மழுப்பலாகப் பதிலளித்து வந்தார்.
எனினும், பாஜகவின் தொகுதி ஒதுக்கீட்டில் திருநெல்வேலி தொகுதி இடம்பெறாததையடுத்து அங்கு அதிமுக களம் காண்பதும், நயினார் நாகேந்திரன் தொகுதி மாற இருப்பதும் உறுதியாகியிருக்கிறது. திருநெல்வேலி தொகுதியில் ஐந்து முறை நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நிலையில், ஒரு தேர்தலில் வென்றால் மறு தேர்தலில் அவர் வென்றதில்லை என்கிற "சென்டிமென்ட்' தொடர்கிறது. எனவே, கடந்த முறை திருநெல்வேலி தொகுதியில் வென்ற அவர், இந்த சென்டிமென்ட் காரணமாக வேறு தொகுதிக்கு மாறுவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடையே கடந்த ஒரு மாதமாக ஆலோசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் நயினார் நாகேந்திரனை அவருடைய சொந்த தொகுதியில் வீழ்த்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதும், தொகுதி மாற நயினார் நாகேந்திரன் முடிவு செய்ததற்கு காரணம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக மாநிலத் தலைவராக இந்த முறை தானும் வெல்ல வேண்டும், கட்சிக்கும் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் நயினார் நாகேந்திரன். சாத்தூர் தொகுதியில் அவர் போட்டியிட மும்முரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...