எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

விஜய்யை கூட்டணிக்குள் இழுக்கிறதா பாஜக? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என நயினார் நாகேந்திரன் கூறியது...

News image
நயினார் நாகேந்திரன்- கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2026, 10:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. விஜய் வருவதில் விருப்பம் உள்ளதா என்பதில் நான் கருத்து கூற முடியாது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வேண்டும் என்றே பெட்ரோல், டீசல் தட்டுபாடு உள்ளது போன்று நிலையை திமுகவினர் உருவாக்குகிறார்கள் என அவர் கூறினார்.

தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

முன்பெல்லாம் பெரியவர்கள் சாதியை சொல்லி அழைத்து பேசுவார்கள், அப்போது சாதி உதட்டில் மட்டுமே இருந்தது, ஆனால் தற்போது உள்ளத்தில் சாதி உள்ளது. அனைவரும் நடிக்க பழகிவிட்டனர். செய்தியாளர்களுடன் பேசும்போது கவனமாக பேச வேண்டும் கொஞ்சம் வார்த்தை தவறினால் பிரச்னையாகிவிடும். அதற்கு நானே உதாரணம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்தில்(ஏஐ) பெரிய போர் உருவாகிவிட்டது. தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை என்ன சொல்கிறது என்ற அடிப்படையில் பேச வேண்டும். சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும். பாஜகவின் நல்ல திட்டங்கள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அந்தந்த பகுதிகளுக்கேற்ற செய்திகளை வழங்க வேண்டும் என கூறினார்.

தமிழகத்தில் முக்கிய பிரச்னை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை. இதற்கு காரணம் கஞ்சா புழக்கம் அதிகரிப்புதான். இதனை முதல்வர் கட்டுபாட்டில் உள்ள காவல் துறைதான் கட்டுபடுத்த வேண்டும்.

40 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி. திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். கஞ்சா, சட்டம்- ஒழுங்கு, சிறை கைதிகள் சாவுகள் குறித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

மேலும், சமீபத்தில் திருப்பதி சென்றபோது அங்கு பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் இல்லை, ஆனால் இங்கு பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதாக செய்திகள் வருகிறது. காரணம் திமுகவினர் 100 பேர் இருசக்கர வாகனத்தில் சென்று பெட்ரோல் நிலையங்கள் முன்பு நின்றுகொண்டு பெட்ரோல், தட்டுப்பாடு இருப்பது போன்ற செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதை தடுக்க வேண்டும் என தெவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

வரும் பேரவைத் தேர்தலில் மோசமான திமுக ஆட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவது நிச்சயம்.

தமிழ்நாட்டுக்கும் - தில்லிக்குமான தேர்தல் என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் குடும்ப ஆட்சிக்கும் - தமிழக மக்களுக்குமான தேர்தல் இது. 2 வயது சிறுமி கூட பாதுகாப்பாக இல்லை, ரத்த காயங்களுடன் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் விளாத்திகுளம் சம்பவம் போல் நாள்தோறும் நடந்து வருகிறது. ஆட்சியின் அவலங்கள் நாள்தோறும் வெளியாகி வருகிறது. கஞ்சாவுடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர்

செய்தியாளர்கள்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?

நயினார் நாகேந்திரன்: அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. உங்களுக்கு தெரிந்த அளவுக்கு கூட எனக்கு அதுகுறித்த விவரம் இல்லை.

செய்தியாளர்கள்: விஜய்யை பாஜக, சிபிஐ விசாரணைத்து என்று அழைத்து மிரட்டி கூட்டணிக்குள் இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே?

நயினார் நாகேந்திரன்: எதிர்கட்சிகள் நாங்கள் விஜய்யை மிரட்டுவதாக கூட கூறலாம். ஆனால் அவை பொய்... தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலை, கொள்ளை நடக்கிறது. நாங்குநேரி, சிவகங்கையில் கஞ்சா போதையில் வருவோர் போவோரை எல்லாம் வெட்டுகிறார்கள். இதை ஆளும்கட்சிதான் செய்கிறது. அதற்கு காரணம் கஞ்சாதானே. நான் நாட்டு மக்களுக்கு நடக்கும் தீயவைகள் குறித்து பேசுகிறேன் உங்களுக்கு இருக்கும் ஒரே கவலை கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பதாக உள்ளது.

செய்தியாளர்கள்: உங்கள் கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்று விரும்புகிறீகளா?

நயினார் நாகேந்திரன்: விஜய் வருவதில் விருப்பம் உள்ளதா என நான் கூற முடியாது.

செய்தியாளர்கள்: விஜய் ஒருநாள் முன்பே விஜய் தில்லி செல்வதால் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா?

நயினார் நாகேந்திரன்: கரூர் சம்பவத்திற்காக தில்லி செல்கிறார். அதனை வேறு விஷயங்களுடன் தொடர்பு படுத்தக் கூடாது.

செய்தியாளர்கள்: விஜய் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

நயினார் நாகேந்திரன்: இது குறித்து நான் கருத்து கூற முடியாது.

வரும் 17 தேதி அதிமுகவுடன் இணைந்து திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 17 ஆம் தேதிக்கு பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.