பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.

தவெக தலைவர் விஜய்.

தவெக தலைவர் விஜய்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. புதுவரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
முதல்முறை தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடும் நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அதன் தலைவர் விஜய் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக கூட்டத்தில் பேசிய விஜய், சட்டப்பேரவைத் தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான். நமக்கும் ஸ்டாலின் கூட்டணிக்கும்தான் போட்டி என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...