தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

ஒரே நேரத்தில் பிரசாரத்தை தொடங்கிய மு.க. ஸ்டாலின், விஜய்!

ஒரே நேரத்தில் பிரசாரத்தை தொடங்கிய மு.க. ஸ்டாலின், விஜய்...

News image

ஒரே நேரத்தில் பிரசாரத்தை தொடங்கிய மு.க. ஸ்டாலின், விஜய் - X

Updated On :30 மார்ச் 2026, 12:39 pm IST

கொளத்தூரில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும், பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் அதே நேரத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்தவுடன் கொளத்தூரில் இருந்து மு.க.ஸ்டாலினும், பெரம்பூரில் இருந்து விஜய்யும் அவரவர் பிரசார வாகனத்தில் ஏறி சாலைவலம் மேற்கொண்டுள்ளனர்.

பெரம்பூரைத் தொடர்ந்து கொளத்தூர், வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

Summary

M.K. Stalin and Vijay Launch Campaigns Simultaneously!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.