வருகின்ற மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என விஜய் கேட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.
இதுதொடர்பாக முடிவெடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முழு ஆதரவை வழங்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், வகுப்புவாத, மதவாத சக்திகளைக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Alliance with TVK to continue in Lok Sabha elections as well! — Congress
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புதுச்சேரியில் புதிய கூட்டணி: காங்கிரஸ்-தவெக இணைந்துதான் முடிவை எடுக்க வேண்டும்: கிரிஷ் சோடங்கர்
தவெகவுடன் இணைந்ததால் கட்சிப் பதவியை ராஜிநாமா செய்த கவுன்சிலர்!
கூட்டணி உறுதியானது! விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!







