ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆட்சியிலும் பங்கு
அதிகாரத்திலும் பங்கு
இது திருமா காலம்-இனி
உயர்வோம் மேலும் மேலும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தவெக அமைச்சரவையில் பங்கேற்கும் எனத் தகவல் தெரிய வந்துள்ளது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய கொள்கை முழக்கங்களில் ஒன்றாகும்.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 108 இடங்களில் வென்ற விஜய், காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவற்றிடம் ஆதரவு கோரினார். இந்த கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன. இதையடுத்து தவெகவின் பலம் 118 எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளது.
தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. பெரும்பான்மைக்கான சிக்கல் தீர்ந்த நிலையில் பனையூர் அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் 3-வது முறையாக விஜய் இன்று உரிமை கோரியுள்ளார்.
Summary
VCK Deputy General Secretary Vanni Arasu has stated, A share in the government and a share in power.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக அமைச்சர்களை சந்தித்தார் பாடகர் வேடன்!

அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறை ஒதுக்கீடு!
தமிழக அமைச்சர்களாக வன்னி அரசு, ஷாஜகான் பதவியேற்பு!

விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |




