இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக டி. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இன்று நடந்த அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவெக ஆட்சியமைக்க ஆளுநருக்கு வழங்கப்பட உள்ள ஆதரவுக் கடிதத்தில் ராமச்சந்திரன் கையெழுத்திட்டுள்ளார்.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தளி தொகுதியில் டி.ராமச்சந்திரனும் திருத்துறைப்பூண்டியில் மாரிமுத்துவும் வெற்றி பெற்றனர்.
பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் தவெகவுக்கு கிடைக்காத நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியிடம் அக்கட்சி ஆதரவு கோரியிருந்தது. இதையடுத்து தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் வழங்கியுள்ளது.
Summary
T. Ramachandran has been elected as the leader of the Communist Party of India (CPI) legislative group.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! தர்காவை அகற்றுவதே வலதுசாரிகளின் நோக்கம்: கம்யூ.








