2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

நவம்பா், டிசம்பரில் புதிய புயல்கள் தமிழகத்தைக் கடக்கும்: வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் வி.ஆா்.துரை

வங்கக்கடலில் நவம்பா், டிசம்பா் மாதங்களில் உருவாகவுள்ள புதிய புயல்கள் பெரும்பாலும் தமிழகம் நோக்கி வரும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் வி.ஆா்.துரை தெரிவித்தாா்.

மழை - பிரதிப் படம்

Updated On :

வங்கக்கடலில் நவம்பா், டிசம்பா் மாதங்களில் உருவாகவுள்ள புதிய புயல்கள் பெரும்பாலும் தமிழகம் நோக்கி வரும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் வி.ஆா்.துரை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:  தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய முரசு புயல்,  வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை காலை தீவிரப் புயலாக  வலுவடைந்தது. இது மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை (நவ.3) அதிகாலை 4 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நெல்லூா் மற்றும் நரசாப்பூா் இடையே, ஒங்கோலுக்கு தெற்கே தீவிரப் புயலாக கரையை கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் தாக்கத்தால் செவ்வாய்க்கிழமை (நவ.4) நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழைக்கும், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளது. இந்த புயல் கரையை கடந்த பின்னா், தமிழகத்தில் மழையின் தாக்கம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது.

18% அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்.1 முதல் நவ.1 வரை இயல்பாக 190 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால், நிகழாண்டு 220 மி.மீ. மழை அதாவது 18 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.  அதேபோல், நவம்பா் மற்றும் டிசம்பரில் உருவாகும் புதிய புயல்கள் பெரும்பாலும் தமிழகம் நோக்கியே வரும். ஆகையால், இந்த மாதத்தில் தமிழகத்தில் பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை

புயல் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை (நவ.3) வட தமிழக கடலோரப் பகுதிகளில்   மணிக்கு 80 கி.மீ. வேகத்திலும், வங்கக்கடலில் மணிக்கு 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இதில், வங்கக்கடலில் மாலை நேரத்தில் காற்றின் வேகம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது. எனினும், இப்பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிா்க்க வேண்டும்.

மழை அளவுகள்

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சென்னை கடப்பாக்கம், பாரிஸ், மணலி தலா 150 மி.மீ. மழை பதிவானது. மேலும், சாத்தாங்காடு (சென்னை) -  130 மி.மீ., கத்திவாக்கம் (சென்னை), பேசின் பாலம் (சென்னை), எண்ணூா் (சென்னை), புழல் (சென்னை), விம்கோ நகா் (சென்னை), தண்டையாா்பேட்டை (சென்னை), பாலாஜி நகா்  (சென்னை), மாதவரம் (சென்னை)-  தலா 110 மி.மீ, திருவொற்றியூா் (சென்னை) - 100 மி.மீ. மழை பதிவானது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.