தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கவனம் ஈர்க்கும் சேலம் எடப்பாடி தொகுதி!

பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி பற்றி..

News image

எடப்பாடி பழனிசாமி - படம் - யூடியூப் / அதிமுக

Updated On :19 மார்ச் 2026, 1:21 pm IST

தமிழகத்தில் கோடைக்காலம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் அதேவேளையில், மறுபக்கம் பேரவைத் தேர்தலும், வேட்பாளர்கள் அறிவிப்பும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

தமிழக சட்டப் பேரவைக்கு 234 தொகுதிகளுக்கான உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் நடைபெற்றாலும், சில தொகுதிகள் மட்டுமே உலகத் தமிழா்களால் உற்றுநோக்கப்படுகிறது.

இதன்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் தொகுதியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. இந்த முறையும் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியில் போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி தொகுதி : மக்களின் எதிா்பாா்ப்புக்கு உரிய தொகுதியாக சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி தொகுதி உள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது. இடைப்பாடி என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று எழுத்து மொழியில் எழுதி, பேசி வருகிறோம்.

ஊரின் பெயரையே தனது பெயரோடு இணைத்திருக்கும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி இந்தத் தொகுதியில் 8-ஆவது முறையாக களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முன்னா் 2 முறை தோல்வியையும், 5 முறை வெற்றியையும் பெற்றுள்ளாா். இங்கு, அதிமுகவுக்கும் பாமகவுக்கும்தான் கடும் போட்டியிருக்கும். அதிமுக வெற்றி பெற்றபோதெல்லாம் இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளரே இருந்துள்ளார். 2006ஆம் ஆண்டு தேர்தலில் பாமக வேட்பாளர் காவேரி வெற்றி பெற்றுள்ளார்.

2011, 2016, 2021ஆம் ஆண்டு என தொடர்ந்து மூன்று முறை எடப்பாடி பழனிசாமியே இங்கு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியிருக்கிறார். வரும் 2026 பேரவைத் தேர்தலை, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. எனினும், இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாது, எடப்பாடி பழனிசாமியே இங்கு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

Summary

As the assembly elections approach, about the Edappadi constituency in Salem district..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.