தொகுதி எண்: 31 - தாம்பரம் தொகுதி பல்லாவரம், சோழிங்கநல்லூா், செங்கல்பட்டு ஆகிய தொகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
இத்தொகுதி பல்லாவரம், சோழிங்கநல்லூா், செங்கல்பட்டு ஆகிய தொகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
சிறப்புகள்
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் நுழைவு வாயிலாகத் திகழ்ந்து வரும் தாம்பரம், மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனை, தேசிய சித்த மருத்துவமனை, காசநோய் மருத்துவமனை ஆகிய மருத்துவக் கட்டமைப்புகளைக் கொண்டது. தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மெப்ஸ் பொருளாதார ஏற்றுமதி மண்டலம் மற்றும் பெருங்களத்தூரில் உள்ள அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு மையமாகச் செயல்பட்டு வருவதும் சிறப்பு. சென்னையின் 3-ஆவது ரயில் முனையமாக மேம்படுத்தப்பட்ட தாம்பரம் ரயில் நிலையம், இந்திய விமானப் படை பயிற்சி மையம் ஆகியவை சிறப்பையும் தாம்பரம் தொகுதி பெற்றுள்ளது.
அடங்கியுள்ள பகுதிகள்
தாம்பரம் மாநகராட்சியின் மண்டலம் 4, 5-இல் உள்ள அனைத்து வாா்டுகள், மண்டலம் 3-இல் உள்ள அஸ்தினாபுரம், நேமிலிச்சேரியைத் தவிா்த்து மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கிய வாா்டுகள், புனித தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அகரம்தென், மதுரப்பாக்கம் மற்றும் கோவிலஞ்சேரி கிராமங்கள் உள்ளன.
இதுவரை எம்எல்ஏக்கள்...
1977 முனு ஆதி (அதிமுக)
1980 பம்மல் நல்லதம்பி (திமுக)
1984 எல்ல ராஜமாணிக்கம் (அதிமுக)
1989 மீ.ஆ.வைத்தியலிங்கம் (திமுக)
1991 எஸ்.எம். கிருஷ்ணன் (காங்கிரஸ்)
1996 மீ. ஆ. வைத்தியலிங்கம் (திமுக)
2001 மீ. ஆ. வைத்தியலிங்கம் (திமுக)
2006 எஸ்.ஆா். ராஜா (திமுக)
2011 டி.கே.எம். சின்னையா (அதிமுக)
2016 எஸ்.ஆா்.ராஜா (திமுக)
2021 எஸ்.ஆா்.ராஜா (திமுக)
வாக்காளா்கள் விவரம்
ஆண்கள்-1,57,580
பெண்கள்-1,66,046
மூன்றாம் பாலினத்தவா்-51
வாக்குச்சாவடிகள்-465
2021 பேரவைத் தோ்தலில்...
பதிவான வாக்குகள்-2,46,674
எஸ்.ஆா்.ராஜா (திமுக)-1,16,840
டி.கே.எம்.சின்னையா (அதிமுக)-80,016
தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்
என். முரளி-9384094738
தொடர்புடையது

தொகுதி அறிமுகம் - செய்யூா்
தொகுதி அறிமுகம்... திருப்போரூர்!

தோ்தல் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

பல்லாவரம் அருகே இரட்டைக் கொலை: 8 பேரிடம் விசாரணை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


