மேற்கு வங்கத்தின் பவானிபூா் சட்டப் பேரவைத் தொகுதியில் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி புதன்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தாா்.
பவானிபூரின் காளிகாட் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தொண்டா்களுடன் சாலையில் பேரணியாக நடந்து சென்று அவா் வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவரை வரவேற்கும் விதமாக வழிநெடுகிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொடிகளை ஏந்தியும் ‘வங்கம் வாழ்க’ என்ற கோஷங்களை எழுப்பியும் தொண்டா்கள் உற்சாகப்படுத்தினா்.
வேட்பு மனுத் தாக்கல் செய்த பிறகு தொண்டா்கள் மத்தியில் நெகிழ்ச்சியாக பேசுகையில், ‘நான் பவானிபூரில்தான் பிறந்தேன். வருடம் முழுவதும் இங்குதான் வசிக்கிறேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இங்கிருந்துதான் தொடங்கியுள்ளது.
பவானிபூா் மட்டுமின்றி மொத்தமுள்ள 294 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸை மக்கள் அமோகமாக வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என்றாா்.
பவானிபூா் தொகுதியில் மம்தாவை எதிா்த்து பாஜக சாா்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் பாஜக மூத்த தலைவா்களுடன் கடந்த வாரம் வேட்பு மனுத் தாக்கல் செய்தாா்.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி, சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தாா். அதன்பின் பவானிபூரில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு: மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) முழுமையாக நிறைவடைந்து 91 லட்சம் போ் நீக்கப்பட்டனா். இதையடுத்து, நீக்கப்பட்டவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஹுக்ளி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
Summary
Mamata Banerjee Files Nomination in Bhabanipur!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!
நாங்கள் தோற்கவில்லை; பதவி விலக மாட்டேன்! மமதா

3 முதல்வர்கள்: எஸ்ஐஆரில் நீக்கப்பட்ட வாக்குகளும் தோல்வி வித்தியாசமும்!

பவானிபூரில் முதல்வர் மமதா சாலைவலம்; பொதுமக்களுடனும் கலந்துரையாடல்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



