மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பவானிபூரில் முதல்வர் மமதா சாலைவலம்; பொதுமக்களுடனும் கலந்துரையாடல்

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜி சாலைவலம் மேற்கொண்டார்.

Mamata leads 'padyatra' in Kolkata's Bhabanipur, interacts with people

மமதா பானர்ஜி - கோப்புப்படம்.

Published On :

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜி சாலைவலம் மேற்கொண்டார்.

லான்ஸ்டவுன் கிராசிங் முதல் காளிகாட் வரை நடந்த இந்த சாலைவலத்தில், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் சென்று மக்களிடம் கலந்துரையாடி, வாக்கும் சேகரித்தார். அப்போது எத்தனை தாக்குதல்கள் நடத்தினாலும், வங்காளமே மீண்டும் வெற்றி பெறும் என்ற பாடல் அவர் பின்னணியில் ஒலிக்கப்பட்டது.

'தீதி தீதி' என்ற கோஷங்களுக்கு மத்தியில், அவர் பொதுமக்களுக்கு கை கொடுத்தும், அவர்கள் அணிவித்த மாலைகளை ஏற்றும் உற்சாகப்படுத்தினார். தனது பாதங்களைத் தொட்டு வணங்கியவர்களை அப்புறப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினரை அவர் தடுத்து நிறுத்தினார்.

இந்த சாலைவலத்தில் பாரம்பரிய மேளம் மற்றும் புருலியாவின் புகழ்பெற்ற சௌ நடனம் ஆகியவை இடம்பெற்றன. மமதாவுடன் அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் மற்றும் தெற்கு கொல்கத்தாவின் முக்கிய கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். வரும் பேரவைத் தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி களம் காண்கிறார்.

Summary

West Bengal Chief Minister Mamata Banerjee on Sunday led a 'padyatra' in her Bhabanipur Assembly constituency in south Kolkata, accompanied by thousands of party supporters, as the election campaign entered its final phase.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.