தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 7) சந்தித்துப் பேசினார்.
பாஜகவை எதிர்கொள்வதைப் பற்றிய ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை(ஜூன் 8) புது தில்லியில் நடைபெறுகிறது. அதில், 23 எதிர்க்கட்சிகள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தில் ஒருசில காரணங்களுக்காக சில கட்சிகள் பங்கேற்கப் போவதில்லையாம்.
இதையடுத்து, இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மமதா பானர்ஜி தில்லிக்கு இன்று (ஜூன் 7) புறப்பட்டார். தில்லி சென்றிறங்கிய மமதா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவாலை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய இரு தலைவர்களிடையேயான சந்திப்பு உத்வேகமளிப்பதாகவும் எதிர்காலத் திட்டம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் திரிணமூல் காங்கிரஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Trinamool Congress chief Mamata Banerjee on Sunday met Aam Aadmi Party convener Arvind Kejriwal in the national capital, a day ahead of a meeting of the opposition INDIA bloc.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘பாஜகவின் முடிவைக் காணும் வரை நான் உயிரோடுதான் இருப்பேன்’ - மமதா சவால்!

திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி! காரணம் என்ன?

திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!

மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங். அணியில் 64 எம்எல்ஏ-க்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



