வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங். அணியில் 64 எம்எல்ஏ-க்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு!

மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் புதிய அணிக்கு 64 எம்எல்ஏக்கள் ஆதரவளிப்பதாகத் தகவல்...

News image

மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி - கோப்புப் படம் | ANI

Updated On :12 ஜூன் 2026, 8:01 pm IST

மேற்கு வங்கத்தில், முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜிக்கு எதிரான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் புதிய அணிக்கு 64 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்குள் பல்வேறு கிளர்ச்சிகள் வெடித்து வருகின்றன.

மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 58 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் 19 மக்களவை உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து புதிய அணியை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில், மமதாவுக்கு எதிரான புதிய அணியின் மூலம் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிதப்ரதா பானர்ஜி தங்களின் அணிக்குத் தற்போது 64 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, இன்று (ஜூன் 12) செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி மக்களவை உறுப்பினர்கள் தங்களின் பட்டியலை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்ததைபோல, திரிணமூல் சட்டப்பேரவை உறுப்பினர்களும் எங்களின் பட்டியலை சட்டப்பேரவைத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

எங்களுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தற்போது 64 ஆக உள்ளது. தேவையானால், அவைத் தலைவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தட்டும். எங்களுடன் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என நாங்கள் நிரூபிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

Summary

faction within the Trinamool Congress party opposed to Mamata Banerjee in West Bengal has the support of 64 MLAs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.