பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தேர்தல் பார்வையாளர்களின் நடவடிக்கைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 5:20 am IST

மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலர் மீது தேர்தல் ஆணையத்தின் காவல் பார்வையாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்.23}ஆம் தேதி முதல் கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் உள்பட 800}க்கும் மேற்பட்டோரை "இடையூறு ஏற்படுத்தியவர்கள்' என வகைப்படுத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைய காவல் பார்வையாளர்கள் கடந்த ஏப்.21}ஆம் தேதி உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் தலைமையிலான அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரும் திரிணமூல் காங்கிரஸ் எம்பியுமான கல்யாண் பானர்ஜி, "தேர்தல் நடைமுறைக்கும் வாக்காளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என மொத்தம் 800}க்கும் மேற்பட்டோர் மீது தேர்தல் ஆணையத்தின் காவல் பார்வையாளர்கள் கண்மூடித்தனமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கடந்த ஏப்.21}ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாகும்' என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, தேர்தல் ஆணைய காவல் பார்வையாளர்கள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், "இடையூறு ஏற்படுத்தியவர்கள் என தேர்தல் ஆணைய காவல் பார்வையாளர்கள் வெளியிட்ட பட்டியலில் உள்ளோர் பாரதிய நியாய சம்ஹிதா சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அல்லது பிற சட்டங்களின்கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களிடம் விசாரணை நடத்த எவ்வித தடையும் இல்லை' என நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.