நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஹூக்ளி மாவட்டத்தின் பாலகர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியது குறித்து...

News image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 4:49 pm IST

பாஜக ஆட்சிக்கு வந்தால், யாராலும் ஊடுருவ முடியாது என மேற்கு வங்கம், ஹூக்ளி மாவட்டத்தின் பாலகர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.29 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த நாளில், ஹூக்ளி மாவட்டத்தின் பாலகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இன்று, முதல் கட்ட வாக்குப்பதிவு ஏறக்குறைய முடிந்துவிட்டது. மேலும் இது மேற்கு வங்கம் முழுவதும் நான் நடத்தும் 30-ஆவது நிகழ்ச்சியாகும்.

மே 5 ஆம் தேதி, மமதா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு வரும். வங்காளத்தில் முழுப் பெரும்பான்மையுடன் பாஜகவின் ஆட்சி அமைக்கும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்துக்குள் ஒரு ஊடுருவல்காரர் கூட நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கெனவே, இங்குள்ள சட்டவிரோத குடியேறிகள் வேரோடு அகற்றப்படுவார்கள்.

மேலும், ஊடுருவல்காரர்கள் மேற்கு வங்க இளைஞர்களின் வேலைகளையும், ஏழைகளின் உணவுப் பொருள்களையும் அபகரித்து, நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.