சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

மேற்கு வங்கத்தில் 15 நாள்கள் முகாமிடும் அமித் ஷா! ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம்!

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு...

Throw TMC into Bay of Bengal: Amit Shah campaigns for Suvendu Adhikari in west bengal polls

சுவேந்து அதிகாரியுடன் அமித் ஷா - IANS

Published On :

மேற்குவங்க பேரவைத் தேர்தலையொட்டி 15 நாள்கள் தங்கி பிரசாரம் செய்யவிருப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக வேட்பாளருமான சுவேந்து அதிகாரி, மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று(ஏப். 2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மேற்கு வங்கத்திற்கு வந்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக பவானிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரிக்கு வாக்கு சேகரித்து அமித் ஷா சாலைவலம் மேற்கொண்டார்.

முன்னதாக, சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் தொடர்பான நிகழ்வில் பேசிய அமித் ஷா,

"மேற்கு வங்க மாநில மக்கள் அச்சமின்றி வாக்களித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இந்த முறை யாரும் பயப்படத் தேவையில்லை. எந்தவொரு ரௌடியாலும் மேற்கு வங்க வாக்காளர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. திரிணமூல் காங்கிரஸை வேரோடு பிடுங்கி வங்காள விரிகுடாவில் தூக்கி எறிய அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.

வங்க மக்களிடம் நான் வேண்டுகோள் முன்வைக்கிறேன். நாங்கள் பொற்கால வங்கத்தை உருவாக்க விரும்புகிறோம். அதனால்தான் நாம் திரிணமூல் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டியுள்ளது. ஆளும் கட்சி ஊழலால் இந்த மாநிலம் களங்கமடைந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும். பவானிபூர் தொகுதியிலும் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் சுவேந்து அதிகாரிக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள்" என்று பேசினார்.

மேலும் முக்கியத் தகவலாக மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் நாள்களில் இங்கு 15 நாள்கள் தங்கி பிரசாரம் செய்யவிருப்பதாகக் கூறியுள்ளார் அமித் ஷா. இது மேற்குவங்க அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் பாஜக 2016 தேர்தலில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில் தனது தீவிரப் பிரசாரத்தால் 2021 தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி அந்தஸதைப் பெற்றது. தற்போது முக்கிய பகுதிகளில் பாஜகவுக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில் அமித் ஷா மேற்குவங்கத்தில் 15 நாள்கள் பிரசாரம் செய்யவுள்ளார்.

Summary

Throw TMC into Bay of Bengal: Amit Shah campaigns for Suvendu Adhikari in west bengal polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.