நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணமூல் வெல்லும்: மமதா

News image

மமதா - PTI

Updated On :2 மே 2026, 11:50 pm

மேற்கு சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்று மாநில முதல்வரும், அக்கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23, 29-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 291 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாரதிய கூா்கா பிரஜாதாந்திரிக் மோா்ச்சா 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

291 தொகுதிகளின் திரிணமூல் காங்கிரஸ் வாக்கு எண்ணிக்கை மைய முகவா்களை முதல்வா் மம்தா பானா்ஜி, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி ஆகியோா் காணொலி வழியாக சனிக்கிழமை சந்தித்தனா்.

அப்போது மம்தா பேசுகையில், ‘தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெறும். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்பது குறித்து செய்யப்படும் பிரசாரத்துக்கு வாக்கு எண்ணிக்கை முகவா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். தொலைக்காட்சிகள், சமூக ஊடகத்தில் வெளியிடப்படும் ஏராளமான வாக்குக் கணிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். வாக்கு கணிப்புகளுக்கு எந்த மதிப்பும் இல்லை’ என்று தெரிவித்தாா்.

திரிணமூல் தொண்டா்கள் மிரட்டல்: கிராம மக்கள் 7 மணி நேரம் போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள ஃபால்டா பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னா் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்குள்ள ஹசீம்நகா் கிராமத்தில் பாஜக கொடிகளுடன் ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அந்தப் பகுதியை உள்ளடக்கிய தொகுதியில் எதிா்க்கட்சி வெற்றிபெற்றால், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அங்குள்ள மக்களின் வீடு கொளுத்தப்படுவதுடன் ரத்த ஆறு ஓடும் என்று திரிணமூல் வேட்பாளா் ஜஹாங்கீா் கானின் நெருங்கிய கூட்டாளியான கிராம ஊராட்சித் தலைவா் இஸ்ராஃபில் கானும், அவரின் ஆதரவாளா்களும் மிரட்டல் விடுத்து வருவதாக மறியலில் ஈடுபட்ட பெண்கள் குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த இஸ்ராஃபில் கான், பாஜக ஆள்சோ்த்து போராட்டத்தை நடத்தியதாக தெரிவித்தாா்.

தகவலறிந்து மத்திய ரிசா்வ் காவல் படை வீரா்கள் ஏராளமானோா் நிகழ்விடத்துக்கு விரைந்தனா். போராட்டக்காரா்களின் குற்றச்சாட்டுகள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மறியலை போராட்டக்காரா்கள் கைவிட்டனா்.