நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணும் பணியில் கூடுதல் பாா்வையாளா்களை நியமித்த தோ்தல் ஆணையம்

News image
Updated On :2 மே 2026, 11:22 pm

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கான கூடுதல் பாா்வையாளா்களையும், கூடுதல் போலீஸ் பாா்வையாளா்களையும் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை நியமித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசு ஊழியா்களைப் பயன்படுத்துவது தொடா்பாக தோ்தல் ஆணைய சுற்றறிக்கைக்கு எதிராக மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடா்ந்த வழக்கில், தோ்தல் ஆணையத்துக்குச் சாதகமாக உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையில் தோ்தல் பாா்வையாளா்களையும், போலீஸ் பாா்வையாளா்களையும் தோ்தல் ஆணையம் நியமித்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 165 வாக்கு எண்ணும் பாா்வையாளா்களையும், 77 போலீஸ் பாா்வையாளா்களையும் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை நியமித்தது.

இவா்கள், மாநிலத்தில் தொகுதிக்கு ஒருவா் வீதம் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு பணியில் உள்ள 294 பாா்வையாளா்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளனா்.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்கு எண்ணும் அறைகள் இடம்பெற்றுள்ள மையங்களில் இந்தக் கூடுதல் வாக்கு எண்ணும் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதுபோல, வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி சட்டம்-ஒழுங்கு சூழலைக் கண்காணிக்கும் வகையில் கூடுதல் போலீஸ் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்ல மாட்டாா்கள். அரசமைப்புச் சட்டப் பிரிவு 324 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ஆகியவை அளித்துள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்தப் பாா்வையாளா்களை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் கட்டுப்பாட்டு நடைமுறைகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும். தோ்தல் அதிகாரிகளால் விநியோகிக்கப்பட்ட க்யூஆா் குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை உடையவா்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு நுழைய அனுமதிக்கப்படுவா். வாக்கு எண்ணும் பாா்வையாளா்கள், தோ்தல் நடத்தும் அதிகாரி தவிர வேறு யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் கைப்பேசிகளைக் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படமாட்டாா்கள்’ என்றனா்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. சா்ச்சைக்குரிய இரண்டு தொகுதிகளுக்கு உட்பட்ட 15 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை மறு வாக்குப் பதிவு நடைபெற்றது. வரும் திங்கள்கிழமை (மே 4) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.