அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் ஆய்வுக்கூட உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் பரிந்துரை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வுக்கூட உதவியாளர் பணிகாலியிடங்களுக்கு தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு

Updated On :28 நவம்பர் 2014, 2:27 pm

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வுக்கூட உதவியாளர் பணிகாலியிடங்களுக்கு தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது.

    இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் கல்வி மாவட்ட அலுவலரால் ஆய்வுக்கூட உதவியாளர்கள் பணிக்காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். மேலும், இவர்களு்க்கான வயது வரம்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 35 வயதிற்குள்ளும், மிகவும் பிற்பட்ட மற்றும் பிற்பட்ட வகுப்பினருக்கு 32 வயதிற்குள்ளும், பொதுப்பிரிவினருக்கு 30-வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்பிற்கு மேல் மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றோருக்கு அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.

     முன்னுரிமையுடையோர்: அனைத்து முன்னுரிமை பதிவு செய்த இருபாலரும்
(ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம், முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவத்தினரைச் சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்), ஆதிதிராவிடர், அருந்ததியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்பட்ட, முஸ்லீம் மற்றும் பொதுப்பிரிவினர்(ஆதரவற்ற விதவைகள் மட்டும்).

      முன்னுரிமையற்றோர்: ஆதிதிராவிட வகுப்பினர்(பெண்கள்)-31.7.1990, ஆதிதிராவிடர்(ஆண்கள், பெண்கள்)-30.9.1983, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்(பெண்கள்)-31.12.1985, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (ஆண்கள்,பெண்கள்) -30.6.1984, பிற்பட்ட வகுப்பினர்(ஆண்கள், பெண்கள்)-31.8.1982, பிற்பட்ட வகுப்பினர்(முஸ்லீம் ஆண்கள், பெண்கள்)-30.9.1984, பொதுப்பிரிவினர்(பெண்கள்)-31.7.1984, பொதுபிரிவினர்(ஆண்கள், பெண்கள்)-31.1.1984 வரையிலும் இருக்க வேண்டும்.

     எனவே தகுதியானவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டையின் நகல், அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவைகளுடன் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகிற டிச.1ம் தேதி நேரில் வந்து பதிவு மூப்பு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் தாமதமாக வருகின்றவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.