குரூப் 4 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-இல் தொடக்கம்

குரூப் 4 தொகுதியில் அடங்கியுள்ள தட்டச்சர் நிலை காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-இல் தொடங்குகிறது.
குரூப் 4 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-இல் தொடக்கம்
Updated on
1 min read

குரூப் 4 தொகுதியில் அடங்கியுள்ள தட்டச்சர் நிலை காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-இல் தொடங்குகிறது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-குரூப் 4 தொகுதியில் சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-ஐஐஐ பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்ய எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது.
தேர்வானோருக்கு விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கவும், அவற்றின் உண்மைத் தன்மையை அறிய சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17 முதல் 24 வரையில் சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அட்டவணை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com