தொலைத்தொடர்பு துறையில் 1 கோடி வேலைவாய்ப்புகள்!

அடுத்த 5 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் மட்டும் 1 கோடி வேலைவாய்ப்புகள் நிரம்பி காணப்படும் என்று தொலைத் தொடர்பு துறை
தொலைத்தொடர்பு துறையில் 1 கோடி வேலைவாய்ப்புகள்!

புதுதில்லி: அடுத்த 5 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் மட்டும் 1 கோடி வேலைவாய்ப்புகள் நிரம்பி காணப்படும் என்று தொலைத் தொடர்பு துறை திறன் கவுன்சிலின் தலைமை நிர்வா அதிகாரி கோச்சார் தெரிவித்தார்.

நாட்டின் தகவல் தொடர்பியலுக்கு ஆதாரமாக தொலைத்தொடர்பு துறை விளங்கி வருகிறது. இந்த துறையில் பல்வேறு காரணங்களுக்காக வேலையிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் மட்டும் 1 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைத் தொடர்பு துறை திறன் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.சி. கோச்சார் கூறியதாவது: 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொலைத்தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு உற்பத்தியில் கிட்டத்தட்ட 14.3 மில்லியன் மக்கள் பணியாற்ற உள்ளனர். தொலைத் தொடர்பு துறையில் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பணியாற்றி வருவதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறினார்.

தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் படி, தொலைத்தொடர்பு உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவை, எந்திர தொடர்பு போன்ற துறைகளில் பெரும் வேலைவாய்ப்பிற்கான சூழல் உண்டாகும்.

தொழிற்துறை வேலைநிறுத்தத்தின் மூலம் தொலைத்தொடர்பு வேலை இழப்புக்களை சந்தித்து வருகிறது. ஆனால், எந்திரம், தொலைத்தொடர்பு சாதனங்கள், உள்கட்டமைப்பு உற்பத்தி, உள்கட்டுமானம் மற்றும் சேவைகள் நிறுவனங்களில் வரும் தொழில்நுட்பங்களால் வரும் ஆண்டுகளில் நல்ல வாய்ப்பு உருவாகும் என்றார் கோச்சார்.

இந்தியாவில் உற்பத்திகள் படிப்படியாக வளர்ந்து வருவதால், தொலைத்தொடர்பு துறையில் நிறைய வேலைகள் உள்ளன. தேசிய தொழில்சார் தரங்களை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி தொகுதிகள், தொழில் நுட்பத்துடன் இணைந்து தயாரிக்கப்படவுள்ளன. மேலும் அரசு அங்கீகாரம் வழங்கப்படும். ஆட்சேர்ப்புச் செயல்களில் தனது அணுகுமுறையை மாற்றுமாறு அரசாங்கத்தை தொலைத் தொடர்புத் துறை திறன் கவுன்சில் கேட்டுள்ளது.  

தொலைத் தொடர்பு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஊழியர்களாக இருப்பதால், பயமுறுத்தப்படுகிறார்கள், எனவே, தொலைத் தொடர்புத் துறை திறன் கவுன்சில் தனது ஊழியர்களின் அச்சத்தைத் தடுக்கவும், திறமை வாய்ந்தவர்களை ஊக்குவிக்கவும் முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார். 

மனிதவள மேம்பாட்டு அமைப்பில் ஆய்வின் படி, கடந்த ஆண்டு மட்டும் தொலைத்தொடர்பு துறையில் 40 ஆயிரம் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற நிலை அடுத்த 6-9 மாதங்களுக்கு தொடரும். இந்த எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com