வேலை வேண்டுமா..? அண்ணா பல்கலைக்கழகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் மற்றும் ஃபீல்ட் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வேலை வேண்டுமா..? அண்ணா பல்கலைக்கழகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் மற்றும் ஃபீல்ட் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் விவரங்கள்: 

பணி: டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 25,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில், டிப்பளமோ, டிகிரி முடித்தவர்கள் அல்லது ஜியோஇன்ஃபர்மேடிக்ஸ் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். GPS, Total Station operation work பணிகளில் களப்பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

பணி: ஃபீல்ட் அசிஸ்டெண்ட்
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.8,000 - 15,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்புடன், GPS, Total Station operation work-இல் குறைந்தது இரண்டாண்டுகள் களப்பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu  என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Centre for Survey Training and Research (C-STAR), Institute of Remote Sensing, Anna University, Chennai - 600 025.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 05.05.2018.

மேலும் வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/CSTAR%20APR%2018.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com