
வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்பது இலக்காக, ஆசையாக கொண்டுள்ள இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 800 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளம் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Probationary Officers (PO)
காலியிடங்கள்: 800
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் குழு விவாதங்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.708. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.118. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.12.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.canarabank.com/media/8121/rp-1-2018-web-advertisement-english-22102018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.11.2018