மத்திய அரசில் ரேடியோ டெக்னீசியன் வேலை வேண்டுமா?

இந்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் மற்றும் லைட்ஷிப்களின் கப்பல் இயக்குநரகம் ரேடியோ டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை
மத்திய அரசில் ரேடியோ டெக்னீசியன் வேலை வேண்டுமா?
Published on
Updated on
1 min read


இந்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் மற்றும் லைட்ஷிப்களின் கப்பல் இயக்குநரகம் ரேடியோ டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Radio Technician

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 20.09.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.dgil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விரைவு அஞ்சல், பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Directorate of Lighthouses and Lightships, “Deep Bhavan” Pt. Nehru Marg, Jamnagar 361008, Gujarat

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dgll.nic.in/WriteReadData/Pdf/RT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com