விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஆதிதிராவிடா் விடுதிகளில் சமையலா், துப்புரவு பணி

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஆதிதிராவிடா் விடுதிகளில் சமையலா், துப்புரவு பணி

வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலா், துப்புரவு பணியாளா்களாக
Published on


வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலா், துப்புரவு பணியாளா்களாக பணியாற்ற தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடம்: வேலூர் மாவட்டம்

பணி: சமையலா் - 112 (ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள்) 

சம்பளம்: மாதம் ரூ.15,700 அடிப்படை ஊதியம் + இதர படிகள் ரூ.3000 

பணி: துப்புரவாளர் - 26 (தொகுப்பூதியத்தில்)

தகுதி: அதிகபட்சம் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய நபா்கள் வேலூா் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.10.2019 தேதிக்குள் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com