மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வேலை... வேலை.. வேலை...: சென்னை மாவட்டத்தில் 1234 செவிலியர் பணி

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) 1234 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

News image
Updated On :3 அக்டோபர் 2019, 1:25 pm IST

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) 1234 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியுடைய பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பணி: கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) 

காலியிடங்கள்: 1234

தகுதி: டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்தவர்கள் இப்பணியிடத்த்குத் தகுதியுடையவர்கள் அல்ல. 15.11.2012ன் படி எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடன், 18 மாத பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் படிப்பான எம்பிஎச்டபுள்யு முடித்தவர்கள், பிளஸ் 2 கல்வித் தகுதியுடன், 2 ஆண்டு ஏஎன்எம் எனப்படும் ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வைஃப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 01.07.2019-இல் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அரசு நிறுவனங்களான பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியை நிறைவு செய்து வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள், தங்கள் அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தங்கள் பதிவுகளை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை (அக்.4) மாலை 3 மணிக்குள் அலுவலக வேலை நாட்களில் நேரில் வந்து துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சென்னை அவர்களை தொடர்பு கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.