ரூ.34 ஆயிரம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா? 

ரூ.34 ஆயிரம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா? 

நபார்டு வங்கியில் நிரப்பப்பட உள்ள அபிவிருத்தி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம்
Published on


நபார்டு வங்கியில் நிரப்பப்பட உள்ள அபிவிருத்தி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ]

மொத்த காலியிடங்கள்: 91

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Development Assistant - 82 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Development Assistant (Hindi) - 09

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் பட்டப்படிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியை ஒரு பாடமாகக் கொண்டு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.09.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,650 - 34,900 + இதர சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.450. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எM்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1409191823Final%20Advertisement%20DA%20-%202019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.10.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com