ரூ. 63 ஆயிரம் சம்பளத்தில் DRDO-வில் வேலை வேண்டுமா..? 10, +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரூ. 63 ஆயிரம் சம்பளத்தில் DRDO-வில் வேலை வேண்டுமா..? 10, +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள பல்வேறு
Published on


இந்திய ராணுவத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 224

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Stenographer Grade-II (English Typing)  - 13
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 10 நிமிடத்தில் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், எழுதிய வார்த்தைகளை 50 நிமிடத்தில் ஆங்கிலத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Administrative Assistant 'A' (English Typing) - 54
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 30 வார்த்தைகள் வீதம் கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Administrative Assistant 'A' (Hindi Typing) - 04
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 30 வார்த்தைகள் கணினியில் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Store Assistant 'A' (English Typing) - 28
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில் 35 வார்த்தைகள் வீதம் கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Store Assistant 'A' (Hindi Typing) - 04
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 1 நிமிடத்தில்  30 வார்த்தைகள் வீதம் கணியில் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Security Assistant 'A' - 40
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் கடினமான வேலைகள் செய்யும் உடல்திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Clerk (Canteen Manager Grade-III) - 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Asstt Halwai-cum Cook - 29 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சமையல் கலையில் அரசுத் துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Fire Engine Driver 'A' - 06
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு அல்லது மூன்று சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் இலகுரக கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். சாலைப்போக்குவரத்து விதிமுறைகள் தெரிந்திருக்க வேண்டும். கடினமான வேலைகள் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Fireman- 20
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கடினமான வேலைகள் செய்யும் உடல் திறன் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,000

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில்திறந் மற்றும் உடல்தகுதித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ,100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ceptam09.com/Upload/Document/eng_10301_20_1920b.pdf  என்ற இணையதள லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com