சுடச்சுட

    

    வருமான வரித் துறையில் வேலை வேண்டுமா? விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!  

    Published on : 06th August 2019 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Income-Tax


    வருமான வரித் துறையில் காலியாக உள்ள 20 வரி உதவியாளர், மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு தகுதியும், திறமையான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    மொத்த காலியிடங்கள்: 20

    பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

    பணி: Tax Assistant - 02 

    தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றிருப்பதுடன் 
    ஒரு மணி நேரத்திற்குள் 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

    வயதுவரம்பு: 09.09.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    பணி: Multi Tasking Staff - 18

    தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டுத் தகுதிகள் குறித்து இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

    வயதுவரம்பு: 09.09.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை: https://www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தின்படி விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

    மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விளையாட்டுத் தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்களுக்கு https://www.incometaxindia.gov.in/news/recruitment_tax_assistant_mts_kolkata_29_7_19.pdf என்ற லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும். 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.09.2019
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai