மத்திய அரசில் வேலை வேண்டுமா..? பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் இந்திய ரயில்வே, நில அளவைத் துறை,  பாதுகாப்புத் துறை, மத்திய நீர்வளத் துறை, மின்சாரத் துறை போன்ற பல்வேறு பொறியியல்
மத்திய அரசில் வேலை வேண்டுமா..? பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


மத்திய அரசின் இந்திய ரயில்வே, நில அளவைத் துறை,  பாதுகாப்புத் துறை, மத்திய நீர்வளத் துறை, மின்சாரத் துறை போன்ற பல்வேறு பொறியியல் பிரிவுகளில் காலியாக உள்ள 495 பொறியியல் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டடுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 495

காலியிடங்கள் உள்ள துறைகள்:
1. Civil Engineering.  
2. Mechanical Engineering.  
3. Electrical Engineering. 
4. Electronics & Telecommunication Engineering. 

வயதுரம்பு: 01.01.2020 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Notice-ESEP-2020-Engl_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com