ரயில்வேயில் வேலை வேண்டுமா? விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு
ஹூப்ளியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ஹூப்ளியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 01/2020(Sports)
பணி: Sports Person (Sports Quota)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவில் தேசிய, மாநில, பல்கலை அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தபட்சம் மூன்றாவது இடமாவது பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2021 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதி, கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும்.
கட்டணத்தை Crossed Indian Postal Order-ஆக செலுத்த வேண்டும். Indian Postal Order-ஐ Assi.Personnel Officer/HQ & Genl, South Western Railway, Hubbali. என்ற பெயருக்கு எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 28.12.2020
மேலும் விவரங்கள் அறிய https://www.rrchubli.in/Recruitment_compressed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...