ரேடியோ வானியல் மையத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு நிறுவனமான ரேடியோ வானியல் மையத்தின் தமிழ்நாடு (ஊட்டி), மகாராஷ்டிரம் (கோடாட்)  கிளையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மத்திய அரசு நிறுவனமான ரேடியோ வானியல் மையத்தின் தமிழ்நாடு (ஊட்டி), மகாராஷ்டிரம் (கோடாட்)  கிளையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Radio Astronomy Centre (RAC), Ooty

மொத்த காலியிடங்கள்: 13

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Engineer Trainee (Electronics) - 02
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பணி: Scientific Assistant-B (Computers) - 01
வயதுவரம்பு: 43 வயதிற்குள் இருக்க வேண்டும். 
பணி: Technical Trainee (Electrical) - 01
பணி: Technical Trainee (Electronics) - 02
பணி: Tradesman-B (Electrical) - 01
பணி: Work Assistant (Laboratory) - 01
பணி: Work Assistant (Mechanical) - 01
பணி: Security Guard - 02
பணி: Administrative Trainee - 02

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி:ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, அடிப்படைத் கல்வி தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்களை http://www.ncra.tifr.res.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  31.12.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com