யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 8:39 am

தினமணி


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர்

காலியிடங்கள்: 14

சம்பளம்:  மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 01.07.2020 ஆம் தேதியின்படி 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பிஇ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://kanchi.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி:  07.01.2021

மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறுவதற்கு https://kancheepuram.nic.in/notice_category/recruitment/  என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.