பொறியியல் துறையில் சிவில் முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலகில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலகில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

பணி: பணிபார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர்

காலியிடங்கள்: 678

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டகங்கள்: திருப்பூர் 25, கடலூர் 39, கரூர் 16, மதுரை 11, தூத்துக்குடி 17, விழுப்புரம் 17, கள்ளக்குறிச்சி 17, கன்னியாகுமரி 03, திருப்பத்தூர் 14, விருதுநகர் 20, அரியலூர் 16, பெரம்பலூர் 16, திருச்சி 22, நீலகிரி 09, கிருஷ்ணகிரி 33, சேலம் 53, நாகப்பட்டினம் 18, தருமபுரி 23, சிவகங்கை 12, வேலூர் 16, ஈரோடு 17, புதுக்கோட்டை 36, திண்டுக்கல் 26, திருவாரூர் 14, ராமநாதபுரம் 20, காஞ்சிபுரம் 08, செங்கல்பட்டு 14, நாமக்கல் 43, திருநெல்வேலி 04, திருவண்ணாமலை 80, தஞாசாவூர் 24,

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12.400

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முழு நேர அல்லது பகுதி நேர படிப்பு முறையில் மட்டுமே டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஒவ்வொரு மாவட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பின்னர் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ள மாவட்டத்தின் ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாள்களில் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பித்தனை https://tnrd.gov.in, www.ncs.gov.in என்ற இணை இணையதங்களிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.12.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com